பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் இ.பி.எஸ்.,

Added : நவ 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
தென்காசி,உள்ளாட்சி தேர்தல், முதல்வர், இ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி,

தென்காசி: தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் இ.பி.எஸ்., பேசுகையில், தென்காசி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். தென்காசி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யார் முட்டுக்கட்டை போட்டாலும், உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வார்டுகள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். செண்பகவள்ளி அணைக்கட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படும். 2018 - 19 நிதியாண்டில் மராமத்து பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-நவ-201915:42:02 IST Report Abuse
narayanan iyer உள்ளாட்சி தேர்தலா? நல்ல நகைச்சுவை . புதிய மாவட்டம் தொடங்கினால் வழக்கு போடுவார்கள். அதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி போட போகிறீர்கள் . அதனால்தானே விருப்ப மனு பணம் திரும்ப கொடுக்கப்படுகிறது ஏற்கனவே திமுக இட ஒதுக்கீடு காரணமாக வழக்கு போட்டதினால் தேர்தல் நடத்த முடியவில்லை என்றீர்கள் . இப்போ புதிய மாவட்டம் காரணமாக வழக்கு . தேர்தல் இப்போ இல்லை . இதுதான் நிதர்சனம் .
Rate this:
Cancel
mutharasu - puliangudi,tirunelveli,இந்தியா
22-நவ-201912:33:01 IST Report Abuse
mutharasu தென்காசி மாவட்ட தொடக்க விழாவை வரவேற்கிறோம்.,புளியங்குடி தாலுகா அறிவிப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X