பொது செய்தி

இந்தியா

'பிங்க்' மயமான கோல்கட்டா

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா : இந்திய-வங்கதேச அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து, கோல்கட்டா நகரமோ 'பிங்க்' மயமாக மாறி உள்ளது.







இந்திய - வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி, இன்று (நவ.,22) கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதுவரை ரெட் பால் போட்டியாக இருந்த போட்டிகள், பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிங்க் பால் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் முதல் முறையாக பகல் - இரவு ஆட்டமாக நடத்தப்படுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


முதல் முறையாக இந்த போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுவதை கொண்டாடும் விதமாக கோல்கட்டா நகரமே பிங்க் நிறத்திற்கு மாறி உள்ளது. கோல்கட்டாவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்று பிங்க் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இனிப்பு கடைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் பிங்க் நிறத்திற்கு மாறி உள்ளன.





இது தொடர்பான போட்டோக்களை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போட்டி நடக்கும் ஈடன் கார்டனை சுற்றி உள்ள கட்டடங்களும் பிங்க் நிறத்தில் காட்சி அளிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-நவ-201916:30:39 IST Report Abuse
Endrum Indian நானே பார்க்கவில்லை, எனது வழியில் இப்படி இல்லவே இல்லையே. நன்றி இப்படி காண்பித்ததற்கு
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-நவ-201916:26:39 IST Report Abuse
Endrum Indian நானே பார்க்கவில்லை, எனது வழியில் இப்படி இல்லவே இல்லையே. நன்றி இப்படி காண்பித்ததற்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X