சிறுநீரை உறிஞ்சி முதியவரை காப்பாற்றிய டாக்டர்; குவிகிறது பாராட்டு

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (49)
Advertisement
முதியவர், சிறுநீர், டாக்டர், சீனா

இந்த செய்தியை கேட்க

பெய்ஜிங் : விமானத்தில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி காப்பாற்றிய சீன டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, கடந்த 19ம் தேதி, சீன விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில், முதியவர் ஒருவர் பயணித்தார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த ஜாங்ஹாங் மற்றும் ஜாங்சியாங் ஆகியோர் முதியவரின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.
சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட முதியவருக்கு, விமானத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவை மூலம் சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினார்.ஆனால், முதியவரை உயரத்தில் வைத்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறும் நிலை இருந்தது. சிறுநீர் வெளியேறினால் மட்டுமே, முதியவர் உயிர் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.





இந்நிலையில் டாக்டர் ஜாங்ஹாங், யாரும் எதிர்பாராதவாறு, நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் , சிறுநீரை உறிச்சி வெளியேற்ற துவங்கினார். சுமார் 37 நிமிடங்கள் இவ்வாறு செய்து,800 மில்லி சிறுநீரை வெளியேற்றினார். இதனால், அந்த முதியவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். டாக்டரின் இந்த சாதுர்ய செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





இது தொடர்பாக டாக்டர் ஜாங் கூறுகையில், வேறு வழியில்லை. இதில், அதிகம் சிந்திக்கவில்லை. முதியவரின் சிறுநீரை வெளியேற்ற வேண்டும் என மட்டுமே சிந்தித்தேன். ஒருவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது டாக்டரின் கடமையாகும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
25-நவ-201914:44:28 IST Report Abuse
TamilArasan தெய்வம்....
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-201911:19:39 IST Report Abuse
Yaro Oruvan God Bless You Doctor.. You will be remembered for very long time..
Rate this:
Share this comment
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
24-நவ-201905:20:57 IST Report Abuse
Siva Panchalingam மனிதத்துவம் நிறைந்த ஒரு மருத்துவர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X