பூஜைகள் செய்து சாமி நகை அபேஸ்

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : கோயிலில் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி கிரீடத்தை திருட வந்த திருடன், முன்னதாக நீண்ட நேரமாக பூஜைகள் நடத்தி, பின் நகையை திருடிச் சென்ற சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.latest tamil news


ஹைதராபாத்தில் துர்கா பவானி கோவில் உள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் அதிகம் பேர் வருவர். கடந்த புதன்கிழமையன்று பக்தர்கள் யாரும் இல்லாத நேரத்தில் ஒருவர் மட்டும் கோயிலுக்கு வந்தார். தோப்புக்கரணம் இட்டும், கன்னத்தில் போட்டும் பலமுறை அம்மனை தரிசனம் செய்தார். திடீரென நாலாபக்கமும் திரும்பிப் பார்த்தவர், சாமி தலையில் சூடப்பட்டிருந்த வெள்ளி கிரீடத்தை கழற்றினார்.

ஐதராபாத்தின் முக்கிய வணிக பகுதியாக விளங்குவது அபிதிஸ். இங்குள்ள துர்கா பவானி கோயிலில், நவ.,20 ம் தேதியன்று துர்க்கை அம்மனுக்கு வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டிருந்தது. அன்று மாலை 6.20 மணியளவில் கோயிலுக்கு வந்த மர் நபர் ஒருவர், வெகு நேரமாக அம்மன் முன் பூஜைகள் செய்தார். தோப்புக்கரணம் இட்டும், கன்னத்தில் போட்டுக் கொண்டும் பலமுறை சாமி கும்பிட்டார்.
பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு யாரும் கவனிக்காத நேரத்தில், வெள்ளி க்ரீடத்தை தனது ஆடையில் மறைத்து, திருடிச் சென்றார்.


latest tamil newsதிருடிச் செல்லப்பட்ட க்ரீடத்தின் மதிப்பு ரூ.10,000 என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு சம்பவத்தை கண்டித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசார், துப்பு கிடைக்காமல் திணறினர்.
அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்த போது திருடன் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை கிளப்பியது. புரோகிதர்களோ, பக்தர்களோ யாரும் இல்லாத போது திருடன் கிரீடத்தை ஆடையில் மறைத்து திருடி விட்டு, பைக்கில் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
25-நவ-201911:05:16 IST Report Abuse
Kumar periyaar ஏன் அந்த சிலை கடவுள் அவரை வொண்ணுமே செய்ய வில்லை, பாவம் தூங்கிட்டார் போலெ இல்லை அவருக்கு அவ்ளோ தான் பவர் போலெ
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
22-நவ-201918:25:05 IST Report Abuse
jagan இப்ப தெரியுதா ஏன் கண்டவனையும் உள்ளே விட கூடாது என்பதற்கு. குறிப்பிட்ட நபர்கள் தான் கர்பகிரஹம் போகலாம் என்று இருந்தால், நகை காணாமல் போனாலும் அவர்ளை பொறுப்பாக்கலாம்.
Rate this:
Kumar periyaar - Chennai,இந்தியா
25-நவ-201911:03:02 IST Report Abuse
Kumar periyaarகுறிப்பட்டவர்கள் அங்கே ..வைத்தே வேலையை பார்த்து இருக்கிறார்கள் நமது நாட்டில்...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
25-நவ-201916:34:04 IST Report Abuse
Chowkidar NandaIndiaபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணையும் மதராசாவிற்கு படிக்க வந்த பெண்ணையும் கூட அங்கேயே வைத்து முடித்திருக்கிறார்களே நம் நாட்டில். போதாகுறைக்கு திராவிஷ மாநாட்டில் ஜோரான இடுப்பு கிள்ளல் கூட நடந்திருக்கிறதே. இதையெல்லாம் விடவா....
Rate this:
Kumar periyaar - Chennai,இந்தியா
25-நவ-201918:44:01 IST Report Abuse
Kumar periyaarஅவர்கள் செய்ததால் தான் இவர்களும் செயகிறார்களா பலே பலே அப்போ எவனும் சரி கிடையாதா...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-நவ-201916:41:31 IST Report Abuse
Endrum Indian ஒரு கிரீடம் வெறும் ரூ 10000 தானா அதையும் ஒருவன் திருடினானா??/என்ன வித பிச்சைக்காரனோ இவன்???ஆயுர்வேலை இவனை பிடித்தால் அவன் என்ன சொல்வான் "எனக்கு ஒரு மாந்திரீகர் சொன்னார் அதை என்னிடம் வைத்துக்கொண்டால் பணம் கொட்டோ கொட்டும் என்று அதற்குத்தான் இப்படி செய்தேன் என்று"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X