இந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு 'நோ': சிவசேனா

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : இந்திரலோக பதவியே கொடுப்பதாக கூறினாலும் இனி பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடரப் போவதில்லை என சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.





செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி.,யான சஞ்சய் ராவத்திடம், சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர ஒப்புக் கொண்டால் பா.ஜ., உடனான கூட்டணியை தொடர்வீர்களா என கேட்கப்பட்டது. அதற்க பதிலளித்த அவர், "அதற்கான நேரம் முடிந்து விட்டது. இந்திரலோக பதவி தருவதாக இருந்தாலும் பா.ஜ.,வுடன் கூட்டணியை இனி தொடரும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
சரத் பவார் உங்கள் பெயரை முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்தாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இது தவறானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக வேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு 3 கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன.





சிவசேனா, தேசியவாத காங், காங்., கூட்டணிக்கு "மகாராஷ்டிர விகாஸ் அகாதி" (மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி) என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மும்பையில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியாகலாம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராக இருப்பார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-நவ-201916:57:36 IST Report Abuse
meenakshisundaram ஐயோ கேட்டது என்னமோ முதல்வர் பதவி தானே ?அப்போ எப்படி இண்டிர பதவி தருவார்கள்? வசனம் பேசாதீங்க ,சாயம் வெளுத்துடும்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
22-நவ-201919:59:22 IST Report Abuse
bal சரியான அடி வாங்கப்போறீங்க...காங்கிரஸிடம்....இதுவரை ஏதாவது அரசு காங்கிரஸ் சப்போர்டில் முழு பதவி காலம் நீடித்ததே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201918:28:33 IST Report Abuse
நக்கல் மஹாவில் சேனா மற்ற இருவருடன் சேர்ந்து செய்யும் கூத்தை கவனிக்கவேண்டியவர்கள் முக்கியமாக அந்த மக்கள்... தாங்கள் அளித்த ஓட்டை வைத்து இவர்கள் எப்படி சுயநலமாக முடிவெடுக்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.... தமிழ்நாடு மாதிரி தலைவர் என்ன தில்லாலங்கடி வேலை செய்தாலும் சரிதான் என்று அந்த மக்கள் யோசிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X