இந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு நோ: சிவசேனா| Dinamalar

இந்திர பதவி தந்தாலும் பாஜ,வுக்கு 'நோ': சிவசேனா

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (33)
Share

இந்த செய்தியை கேட்க

மும்பை : இந்திரலோக பதவியே கொடுப்பதாக கூறினாலும் இனி பா.ஜ.,வுடன் கூட்டணியை தொடரப் போவதில்லை என சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



latest tamil news


செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி.,யான சஞ்சய் ராவத்திடம், சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர ஒப்புக் கொண்டால் பா.ஜ., உடனான கூட்டணியை தொடர்வீர்களா என கேட்கப்பட்டது. அதற்க பதிலளித்த அவர், "அதற்கான நேரம் முடிந்து விட்டது. இந்திரலோக பதவி தருவதாக இருந்தாலும் பா.ஜ.,வுடன் கூட்டணியை இனி தொடரும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
சரத் பவார் உங்கள் பெயரை முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்தாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இது தவறானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக வேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு 3 கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன.


latest tamil news



சிவசேனா, தேசியவாத காங், காங்., கூட்டணிக்கு "மகாராஷ்டிர விகாஸ் அகாதி" (மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி) என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மும்பையில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியாகலாம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராக இருப்பார் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X