பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முன்னிலை

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
பால், நச்சுத்தன்மை, தமிழகம், திமுக, தி.மு.க., சுகாதார அமைச்சர், அஸ்வினி குமார் சவுபே,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

திமுக எம்.பி., டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த பதில்:
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது. தமிழகம், கேரளா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்ளாடோக்சின் எம்1 என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.


latest tamil news




நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டில்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தது, உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh, Abu Dhabi - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-201917:04:58 IST Report Abuse
Suresh, Abu Dhabi நம்ம ராஜேந்திர பாலாஜி சார் இதுக்கு என்ன சொல்ல போகிறார்?
Rate this:
Cancel
Karunakaran - Chennai,இந்தியா
22-நவ-201917:00:29 IST Report Abuse
Karunakaran பால்வளத்துறை அமைச்சரும், அவருடைய துறையில் இருக்கும் அதிகாரிகளும் அப்படி. 3 வருடங்களுக்கு முன்னால் வந்த பிரச்னையை அப்படியே அமுக்கி விட்டார்கள்.
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
22-நவ-201916:37:42 IST Report Abuse
dandy சீனாவில் இதற்கு துப்பாக்கி சூடு தண்டனை ....உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X