அரசியல் மாற்றம்: என்னவாகும் புல்லட் ரயில் திட்டம்?| Dinamalar

அரசியல் மாற்றம்: என்னவாகும் புல்லட் ரயில் திட்டம்?

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (31)
Share
மும்பை : மஹாராஷ்டிராவில் புதிதாக உருவாக உள்ள சிவசேனா, தேசியவாத காங், காங்., கூட்டணி அரசு அமைந்தால் ஆமதாபாத்- மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குஜராத்தின் ஆமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இணைந்து 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல்

மும்பை : மஹாராஷ்டிராவில் புதிதாக உருவாக உள்ள சிவசேனா, தேசியவாத காங், காங்., கூட்டணி அரசு அமைந்தால் ஆமதாபாத்- மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



latest tamil news




குஜராத்தின் ஆமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இணைந்து 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்திற்காக 0.1 சதவீதம் என்ற குறைந்த பட்டிக்கு ஜப்பான் அரசு ரூ.88,000 கோடி இந்தியாவிற்கு கடனாக வழங்க உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக மஹாராஷ்டிர அரசு சார்பில் ரூ.1 லட்சம் கோடி அளிக்கப்பட வேண்டும். ஆமதாபாத்-மும்பை இடையேயான 508 கி.மீ., தூரம், புல்லட் ரயில் திட்டத்தால் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். இத்திட்டத்தை 2023 ம் ஆண்டிற்குள் நிறைவு செய்யதிட்டமிடப்பட்டது.


latest tamil news




ஆனால் மஹாராஷ்டிராவில் ஆட்சியில் அங்கம் வகிக்க உள்ள காங்.,க்கு இந்த திட்டத்தில் ஆர்வமில்லை என கூறப்படுகிறது. இது பற்றி காங்.,ன் பெயர் வெளியிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்த திட்டத்திற்காக மஹாராஷ்டிர அரசு அளிக்க வேண்டும் என கூறும் ரூ.1 லட்சம் கோடி மிக அதிகம். ஒருவேளை இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். மஹாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படாது. விவசாயிகள் நல திட்டம், விவசாய கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற அதிக தொகை தேவைப்படும் என்றார்.


latest tamil news



தேசியவாத காங்., தலைவர் ஒருவர் கூறுகையில்; புல்லட் ரயில் திட்டத்திற்காக மஹாராஷ்டிர அரசு அளிக்க வேண்டிய ரூ.1.08 லட்சம் கோடியில் ரூ.5000 கோடி மட்டுமே அளிக்க முடியும் என மத்திய அரசிடம் கூறி விட வேண்டும் என 3 கட்சிகள் இடையே நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தின் போதே பேசி முடிவு செய்யப்பட்டது. பிறகு, ஆட்சி அமைத்த உடன் இந்த திட்டத்திற்காக மாநில அரசு பணம் அளிக்காது எனவும், அந்த பணத்தை பிற மக்கள் நல திட்டத்திற்கு செலவிட உள்ளதாகவும் மத்திய அரசிடம் தெரிவித்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X