இந்தியா மீது நடவடிக்கை இல்லை: அமெரிக்கா சூசகம்

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement
India, Sanction, US, Russian, S-400 Deal, US Official, இந்தியா, அமெரிக்கா, எஸ்-400, துருக்கி,

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன் : ரஷ்யாவிடமிருந்துது எஸ்.400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்காது என தெரிகிறது.
இந்திய வான் பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து, அதி நவீன, எஸ் - 400 ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு கடந்தாண்டு ஒப்பந்தம் செய்தது; இதன் மதிப்பு, 35 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு, இந்தியா வந்தடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த விவகாரத்தில், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாததால், அது குறித்த பேச்சிற்குஇடமில்லை. இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
என்றாலும், ஒரு புறத்தில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு, மறுபுறுத்தில் ரஷ்யா உளவு பார்க்கத்துடிக்கும். இதனால், இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கசிவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ள தருக்கி விவகாரத்தில், இந்தியா முற்றிலும் மாறுபடுகிறது எனக்கூறினார்.





இதனிடையே, கடந்த வாரம் இந்தியாவிற்கு, அதிநவீன எம்கே 45 கடற்படை துப்பாக்கிகளை வழங்குவதற்கு, அமெரிக்க அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் ஆகும்.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதால், அந்நாட்டிற்கு வழங்கவிருந்த அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப்- 35 ரக போர் விமானங்களை வழங்க முடியாது என அமெரிக்கா தெரிவித்து விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-நவ-201916:21:58 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தியா பொறுப்பான ஒரு நாடு. இது மூர்க்க தேசம் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201916:17:44 IST Report Abuse
ஆப்பு அங்கே ரஷ்யாவுலேருந்து ஏவுகணை வாங்குவோம். இங்கே அமெரிக்காவிலிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவோம். அவிங்களுக்கு 40000 கோடி. இவிங்களுக்கு 50000 கோடி. எவனாவது பொருளாதாரத் தடை அது இதுன்னு வாயத் தொறப்பானா?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-201904:34:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கடந்த ஐந்தாண்டுகளில் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க சென்று இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 34,000. கடந்த ஐந்தாண்டுகளில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவு....
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
22-நவ-201915:56:32 IST Report Abuse
Sampathkumar Sampath போங்கடா டுபுக்குங்களா. சும்மா உடான்சு உட்டுகினு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X