' பருவகால எமர்ஜென்ஸி ' - இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன்: ' பருவகால எமர்ஜென்ஸி ' - என்ற வார்த்தை, இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு டிக் ஷனரி தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து உலக நாடுகள் பெரும் கவலை அடைந்து வருகின்றன. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்கூட பருவகால மாற்றம் தொடர்பாக அதீத கவலையை தெரிவித்தனர்.







' பருவகால எமர்ஜென்ஸி ' ( 'Climate emergency' ) என்ற வார்த்தை 2019 ஆம் ஆண்டின் மிக முக்கியமான மற்றும் முக்கியமாக விவாதிக்கப்பட்ட சொற்களில் ஒன்றாகும்' என்று ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த வார்த்தை பயன்பாடு 10 ஆயிரம் சதவீதம் அதிகரித்து இருந்தது. மேலும் காலநிலை மாற்றத்தைக் குறைக்க அல்லது நிறுத்த அவசர நடவடிக்கை தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பல்வேறு நாடுகளில் முக்கிய சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். பருவகால மாற்றம் என்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் மொழி வழக்கில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற ஆய்வில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

' பருவகால எமர்ஜென்ஸி ' ( 'Climate emergency' ) என்ற வார்த்தை 2019 ஆம் ஆண்டில் அதிகம் பிரயோகப்படுத்தப்பட்ட வார்த்தையாக ஆக்ஸ்போர்டு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
22-நவ-201915:25:59 IST Report Abuse
S.P. Barucha பூமி , சூரியனை 23 5 டிகிரி சாய்ந்து சுற்றுவதால்தான் பருவகால மாற்றம் ஏற்படுகிறது, பூமி சாய்ந்து சுற்றுவதில் மற்றம் ஏற்பட்டால் தான் அசாதரண பருவமாற்றமும் ஏற்படும், இப்போது பேசப்படுவதெல்லாம் வெறும் புரளி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X