இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : இந்தியாவில் 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு, கொள்ளை சம்பவம் நடப்பதாக தேசிய குற்றப்பதிவு புள்ளிவிபர கணக்கு தெரிவிக்கிறது.

இந்த புள்ளிவிபரத்தின் படி, 2017 ம் ஆண்டில் மட்டும் 2,44,119 கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2016 ம் ஆண்டு நடந்த திருட்டுகளை விட 10 சதவீதம் அதிகமாகும். 2017 ம் ஆண்டு வீடுகளில் இருந்து திருடப்பட்ட தொகை ரூ.2065 கோடி. இது முந்தைய ஆண்டில் திருடப்பட்ட தொகையான ரூ.1475 கோடியை விட 40 சதவீதம் அதிகம். 2017 புள்ளிவிபரத்தின்படி ஒரு நாளைக்கு 669, ஒரு மணி நேரத்திற்கு 28, 3 நிமிடத்திற்கு ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

நவம்பர் 15 ம் தேதி வீடுகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. வீடு பாதுகாப்பு என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, போலீசாருக்கும் சவாலான விஷயமாகவே கருதப்படுகிறது. இதனால் வீடுகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் நடக்கும் 64 சதவீதம் திருட்டுக்களுக்கு வீடுகளில் போதிய பாதுகாப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இதில் நடக்கும் திருட்டுகளின் 70 சதவீதம் வீடுகளில் நடக்கும் திருட்டு எனவும், மீதமுள்ள 30 சதவீதம் திருட்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடப்பதாகவும் கூறப்படுகிறது.