முதல்வராகுங்கள்: உத்தவிடம் சரத்பவார் வலியுறுத்தல்?

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (18)
Advertisement
Sharad Pawar, Uddhav Thackeray, Chief Minister, NCP, congress, shivsena, சரத்பவார், உத்தவ் தாக்கரே, முதல்வர், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா,

மும்பை : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக பதவி ஏற்கும்படி சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை, சிவசேனா கட்சி தலைவர் சரத்பவார் வலியுறுத்தியுக உத்தவ் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைள்ளார். இது தொடர்பாக எம்.எல்.ஏ.,க்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் தெரிவிப்பதாக்க சிவசேனா தீவிரமாக தயாராகி வருகிறது. சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டணிக்கு '' மஹாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி'' என பெயர் வைக்கலாம் என தெரிகிறது. சிவசேனாவும், காங்கிரசும் முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளதால், குறைந்த பட்ச செயல் திட்டம் தொடர்பாக இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று(நவ.,21) இரவு, டில்லியில் இருந்து மும்பை திரும்பிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன், ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சிவசேனாவின் சஞ்சய் ராவத்தும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரும் உடன் இருந்தனர்.




இந்த சந்திப்பு தொடர்பாக மும்பை அரசியல்வட்டாரங்கள் கூறுகையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றால், கூட்டணியின் ஒரு மித்த முடிவாக இருக்கும் என்றார். அதற்கு உத்தவ், கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிப்பதாக பதிலளித்தார்.மேலும், முதல்வர் பதவிக்கு தனது பெயரை பரிந்துரை செய்தீர்களா என சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு, சரத்பவார் கூறுகையில், இது தவறான தகவல். மஹாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரேவைதான் முதல்வராக பார்க்க விரும்புகின்றனர் எனக்கூறினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவசேனாவுடன் கூட்டணிக்கு சோனியா ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரித்விராஜ் சவான் கூறுகையில், பட்னவீசின் தவறான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதாகவும், மாநிலத்தை இனிமேலும் அவதிப்படுவதை அனுமதிக்க முடியாது. என்றார்.

சிவசேனாவின் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், மூன்று கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை நாளை(நவ.,23) கவர்னரிடம் வழங்குவோம் என்றார்.மேலும், வரும் ஞாயிறு அல்லது திங்கள் அன்று மஹாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்கும் எனக்கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
23-நவ-201907:52:41 IST Report Abuse
Anandan தீவிரவாதிகளின் நிறுவனத்திலிருந்து மத்திய ஆளும் கட்சி 10 கோடி நிதி வாங்கியுள்ளதாம்.
Rate this:
Share this comment
Cancel
Balamurugan - coimbatore,இந்தியா
22-நவ-201919:35:31 IST Report Abuse
Balamurugan சிவசேனா பெரும் தவறை செய்துவிட்டது. இதற்கான வெகுமதியை அடுத்த தேர்தலில் நிச்சயம் பெறுவார்கள். பிஜேபி மிகப்பெரும் வெற்றியை அடுத்த தேர்தலில் பெற்று அதை தொடரும்.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
23-நவ-201906:39:58 IST Report Abuse
Sathya Dhara 100 % உத்தவ் தாக்ரே தனது தந்தை பெயரையும், கட்சியின் பெயரையும், கட்சியின் உறுப்பினர்களையும், மொத்தமாக ஏமாற்றி விட்டு.......................பதவிக்காக ஹிந்து மதத்திற்கு ஊரு விளைவிக்கும் துரோகிகளையும் ஊக்குவித்து பதவிக்கு வந்து என்ன சாதிக்கப்போகிறான். மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
22-நவ-201919:03:34 IST Report Abuse
Pannadai Pandian kumarasamy II in making....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X