ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது ; நிதின் கட்கரி ஆரூடம்| Dinamalar

ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது ; நிதின் கட்கரி ஆரூடம்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (17)
Share
மும்பை: மஹாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., உடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தாலும், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ.,வுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவின் திடீர் பிடிவாதம் காரணமாக, கூட்டணி முறிந்தது. இதனால், எந்த கட்சியும் பெரும்பாண்மை நிரூபிக்க முடியாததால்,
Nitin Gadkari, Maharashtra, BJP, Shivsena, நிதின்கட்கரி, அமைச்சர், மஹாராஷ்டிரா, பாஜ, சிவசேனா

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., உடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தாலும், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ.,வுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவின் திடீர் பிடிவாதம் காரணமாக, கூட்டணி முறிந்தது. இதனால், எந்த கட்சியும் பெரும்பாண்மை நிரூபிக்க முடியாததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால், காங்., - தேசியவாத காங்., கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையே சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், இந்திரலோக பதவி தருவதாக இருந்தாலும் பா.ஜ.,வுடன் கூட்டணியை இனி தொடரும் பேச்சுக்கே இடமில்லை, என்றார்.


latest tamil news



இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: காங்., - தேசியவாத காங்., - சிவசேனா இணைவது சந்தர்ப்பவாத கூட்டணி. இவர்களால் மஹா.,வில் நிலையான ஆட்சி வழங்கமுடியாது. பாஜ., மற்றும் சிவசேனா கூட்டணி ஹிந்துத்துவத்தின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றும் கூட எங்களுக்கு அதிக கருத்து வேறுபாடுகள் இல்லை. அதை மீறுவது நாட்டிற்கு மட்டுமல்ல, ஹிந்துத்துவத்திற்கும், மஹாராஷ்டிராவிற்கும் ஒரு இழப்பாகும். அந்த கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளுடன் உள்ளதால் ஆட்சி அமைத்தாலும் நீண்டகாலம் நீடிக்காது. இவ்வாறு நிதின் கட்கர கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X