மஹா.,முதல்வர் உத்தவ்:குழப்பத்திற்கு சரத்பவார் முற்றுப்புள்ளி

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் இன்று ( நவ. 22) தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் கூட்டணி
Maharashtra, MahaVikasAghadi, Shivsena, UddhavThackeray, CM, மஹாராஷ்டிரா, முதல்வர், உத்தவ்தாக்கரே, சரத்பவார், மஹாவிகாஸ்அகாதி, கூட்டணி,

மும்பை : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் இன்று ( நவ. 22) தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த கூட்டணிக்கு ''மஹா விகாஸ் அகாதி'' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


சிவசேனாவும், காங்கிரசும் முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளதால், குறைந்த பட்ச செயல் திட்டம் தொடர்பாக காங்., தேசியவாத காங்., தலைவர்களுடன் சிவசேனா ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நிறைவடைந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேசியவாத காங். தலைவர் சரத்பவார் இன்று அறிவித்தார்.
இந்நிலையில் நாளை (நவ. 23) மூன்று கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மஹா.,வில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-நவ-201920:49:55 IST Report Abuse
blocked user பாஜக + இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி எதிர் அணியில் ஐக்கியமாகி பசுவதை தடை சட்டத்தை நீக்கி அடுத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த ஜான் சேனா?
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
22-நவ-201920:06:37 IST Report Abuse
Vaduvooraan மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுவிட்டது
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
22-நவ-201920:02:14 IST Report Abuse
krish பவார், பழைய பெருச்சாளி. சாணக்யவதி. காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து, உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கி, படுகுழியில் தள்ளி, பலியாடு ஆக்கி விட்டார். அதிகாரம் அனுபவித்து, பணம் பகிர்ந்து, பின், ஆட்சி அவலத்திற்கு, அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, வரும் தேர்தலில், காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து, இவரது கட்சியை, தேர்தல் காலத்தில் இருந்து அப்புறப்படுத்தி, அகற்றிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. உத்தவ், சிலந்தி வலையில் சிக்கியாகிவிட்டது.
Rate this:
rajkumar - kuwait,குவைத்
22-நவ-201920:22:27 IST Report Abuse
rajkumarசுடலைனு கருத்து எழுதுனா உடனே கமெண்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X