மஹா.,முதல்வர் உத்தவ்:குழப்பத்திற்கு சரத்பவார் முற்றுப்புள்ளி| Dinamalar

மஹா.,முதல்வர் உத்தவ்:குழப்பத்திற்கு சரத்பவார் முற்றுப்புள்ளி

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (6)
Share
மும்பை : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் இன்று ( நவ. 22) தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் கூட்டணி
Maharashtra, MahaVikasAghadi, Shivsena, UddhavThackeray, CM, மஹாராஷ்டிரா, முதல்வர், உத்தவ்தாக்கரே, சரத்பவார், மஹாவிகாஸ்அகாதி, கூட்டணி,

மும்பை : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் இன்று ( நவ. 22) தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த கூட்டணிக்கு ''மஹா விகாஸ் அகாதி'' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


சிவசேனாவும், காங்கிரசும் முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளதால், குறைந்த பட்ச செயல் திட்டம் தொடர்பாக காங்., தேசியவாத காங்., தலைவர்களுடன் சிவசேனா ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நிறைவடைந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேசியவாத காங். தலைவர் சரத்பவார் இன்று அறிவித்தார்.
இந்நிலையில் நாளை (நவ. 23) மூன்று கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மஹா.,வில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X