பொது செய்தி

இந்தியா

வங்கத்தை சுருட்டிய 'பிங்க்' பந்து * கோஹ்லி, புஜாரா அரைசதம்

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019
Advertisement
India, Bangladesh, Test, Cricket, இந்தியா, வங்கதேசம், டெஸ்ட், கிரிக்கெட்,

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடக்கும் முதல் பகலிரவு டெஸ்டில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஷாந்த், உமேஷ் என இந்திய 'வேகங்கள்' போட்டுத் தாக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது. பேட்டிங்கில் புஜாரா, கோஹ்லி அரைசதம் எட்டினர்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று (நவ.,22) கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கியது. இதில் 'பிங்க்' நிற பந்து பயன்படுத்தப்பட்டது.






இஷாந்த் அபாரம்



'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மோமினுல் ஹக், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. வங்கதேச அணியில் தய்ஜுல், மெகிதி நீக்கப்பட்டு அல் அமின், நயீம் சேர்க்கப்பட்டனர். வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய 'வேகங்கள்' துவக்கத்திலேயே போட்டுத் தாக்கினர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதும் வங்கதேச வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். 15 பந்தில் 4 ரன் எடுத்த இம்ருலை, இஷாந்த் சர்மா வெளியேற்றினார்.






உமேஷ் 'இரண்டு'



போட்டியின் 11வது ஓவரில் இஷாந்த் 'இரட்டை' அடி கொடுத்தார். முதல் பந்தில் மோமினுல் (0), ரோகித் சர்மாவின் அசத்தல் 'கேட்ச்சில்' திரும்பினார். 3வது பந்தில் முகமது மிதுன் (0) போல்டானார். மறுபக்கம் தன் பங்கிற்கு மிரட்டிய ஷமி, முஷ்பிகுரை 'டக்' அவுட்டாக்கினார். சற்று தாக்குப்பிடித்த ஷாத்மன், 29 ரன்னுக்கு கிளம்பினார். பின் வந்த மகமதுல்லா 6 ரன் எடுக்க, லிட்டன் தாஸ் (24), 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். எபாதத் (1), மாற்று வீரராக வந்த மெகிதி ஹசன் (8), அபு ஜயேத் (0) விரைவில் வீழ்ந்தனர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் சாய்த்தார். உமேஷ் 3, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.


இரண்டு அரைசதம்

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் (14), ரோகித் சர்மா (21) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. புஜாரா (55), பகலிரவு டெஸ்டில் முதல் அரைசதம் எட்டிய வீரர் ஆனார். கோஹ்லி தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 68 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கோஹ்லி (59), ரகானே (23) அவுட்டாகாமல் இருந்தனர்.






100

* ஷாத்மனை 'கேட்ச்' செய்த சகா, டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தார். இதுவரை 36 டெஸ்டில் 101 விக்கெட் (90 'கேட்ச்', 11 'ஸ்டம்பிங்') வீழ்ச்சிக்கு கைகொடுத்தார். இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய விக்கெட் கீப்பர் ஆனார்.
* தோனி (90 டெஸ்ட், 294 விக்கெட் வீழ்ச்சிக்கு உதவி), சையது ஹிர்மானி (88ல் 198), கிரண் மோர் (49ல் 130), நயன் மோங்கியா (44ல் 107) முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.


5,000



* கோஹ்லி 32 ரன் எடுத்த போது டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் (19 சதம்) எடுத்த முதல் கேப்டன் ஆனார். இவர் 86 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். சராசரி 63.29 ரன்கள்.
* இந்த இலக்கை எட்டிய முதல் ஆசிய கேப்டன் ஆனார்.
* பாண்டிங் (97 இன்னிங்ஸ், ஆஸி.,), கிளைவ் லாயிடு (106, விண்டீஸ்), கிரீம் ஸ்மித் (110, தெ.ஆப்.,), ஆலன் பார்டர் (116, ஆஸி.,), பிளமிங்கிற்கு (130, நியூசி.,) அடுத்து இவ்வளவு ரன்கள் எடுத்த ஆறாவது கேப்டன் ஆனார் கோஹ்லி.
* ஏற்கனவே கோஹ்லி அதிவேகமாக (65 இன்னிங்ஸ்) 4000 ரன்களை எடுத்த கேப்டன் ஆகியுள்ளார்.


15,000



* இந்திய வீரர் புஜாரா, 12 ரன் எடுத்த போது முதல்தர கிரிக்கெட்டில் (டெஸ்ட், ரஞ்சி உள்ளிட்ட போட்டிகள்) 15,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் இதுவரை 194 போட்டியில் 15,033 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X