பொது செய்தி

தமிழ்நாடு

இரைப்பை புற்றுநோய் பாதிப்பில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்! அதிர்ச்சி அளிக்கிறார் டாக்டர் சந்திரமோகன்

Added : நவ 22, 2019
Share
Advertisement
மருத்துவ துறை, உலக அளவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுடன், முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மருத்துவ துறையில், தமிழகமும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. ஆனால், தமிழக மக்களிடையே, இரைப்பை மற்றும் உணவு குழாயில் ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, பெரிய அளவில் இல்லை. இந்நிலையில், 31 ஆண்டு கள் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி, பணி
 இரைப்பை புற்றுநோய் பாதிப்பில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்! அதிர்ச்சி அளிக்கிறார் டாக்டர் சந்திரமோகன்

மருத்துவ துறை, உலக அளவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுடன், முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மருத்துவ துறையில், தமிழகமும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.

ஆனால், தமிழக மக்களிடையே, இரைப்பை மற்றும் உணவு குழாயில் ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, பெரிய அளவில் இல்லை. இந்நிலையில், 31 ஆண்டு கள் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி, பணி ஓய்வுக்கு பின், 'ஈசோ இந்தியா' என்ற அமைப்பை துவங்கி, 16 ஆண்டுகளாக, இரப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், டாக்டர் சந்திரமோகன். வழக்கமாக நவம்பர் மாதம், இரைப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், அவரிடம் பேசியதிலிருந்து...


உங்களை பற்றி?நான், தஞ்சாவூரில் பிறந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். 1979ல், எம்.பி.பி.எஸ்., முடித்தேன். படிக்கும் போது, இரைப்பை மற்றும் உணவு குழாய் தொடர்பான பிரச்னைகளுக்கு, மக்கள் படும் துன்பங்களை பார்த்து, இரைப்பை - குடல் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற, முதுநிலை படித்தேன். சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில், 31 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். தற்போது, கொடுக்கும் இடத்தில், இறைவன் என்னை வைத்துள்ளார். ஏழை மக்களுக்கு சேவை செய்து திருப்தி அடைகிறேன்.


ஈசோ இந்தியா அமைப்பு துவங்க காரணம்?

உலகளவில், புற்றுநோய் சிகிச்சை அளிக்க, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. கியூமோ தெரபி, டார்கெட் தெரபி, இமினோ தெரபி உள்ளிட்ட பல சிகிச்சைகள் வந்துள்ளன. ஆரம்ப நிலையிலேயே, புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதிலிருந்து மீள சிகிச்சைகள் உள்ளன. கடைசி கட்டத்தில் இருப்பவர்களும், தன் வாழ்நாளில், வலிகள் இல்லாமல் வாழ்வதற்கான சிகிச்சைகளும் உள்ளன. அதுகுறித்த விழிப்புணர்வு தான் மக்களிடம் இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தன்னார்வலர்களின் நிதியுதவி மற்றும் பங்களிப்பு காரணமாக, மலைப்பகுதி கிராம மக்கள் முதல் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.தமிழகத்தில் இரைப்பை புற்றுநோயின் நிலை என்ன?இந்தியாவில், அதிகளவில் புகையிலையைப் பயன்படுத்தும், மிசோரம் மாநிலத்தில், இரைப்பை மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் அதிகஅளவில் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. காரணம், இங்குள்ளோரும் அதிகளவில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.


இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் என்ன?பசியின்மை, உடல் சோர்வு, ரத்த சோகை, வாந்தி, கறுப்பாக மலம் வெளியேறுதல் போன்றவை, இரைப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள். இந்த புற்றுநோய், புகையிலை, அதிக உப்பு, திரும்பத் திரும்ப சூடுபடுத்தப்படும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதால் வருகிறது. மேலும், 'எச் பைலேரியா' என்ற, தொற்றா பண்புடைய மரபணு சார்ந்த கிருமி தொற்று காரணமாகவும் ஏற்படுகிறது.


அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எப்படி உள்ளது?

தமிழகத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நான், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது, புதிய முறைகளை கண்டுபிடித்தோம். இவற்றை சர்வதேச அளவில், பல டாக்டர்கள் பின்பற்றுகின்றனர். அதனால், இரைப்பை - குடல் சிகிச்சை பிரிவு, உயர்தர சிறப்பு மையமாக செயல்படுகிறது. தற்போது, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


உங்களுடைய வெற்றி என்ன?

நான், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நடத்தும், இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், 2,000க்கும் மேற்பட்டோர் கூடுகின்றனர். அவர்கள் வாயிலாக, பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, என் வெற்றியாக கருதுகிறேன்.


மக்களுக்கு நீங்கள் கூறுவது?

புற்றுநோய் வந்தால், தயக்கமோ, பயமோ வேண்டாம். புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் அதிகம். எனவே, அதற்கான அறிகுறிகள் இருந்தால், உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். டாக்டர், 'எண்டோஸ்கோப்பி' பரிசோதனை மேற்கொண்டால், அதற்கு ஒத்துழைக்க வேண்டும். புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க, நவீன சிகிச்சை முறைகள் நம்மிடம் உள்ளன.

டாக்டர் சந்திரமோகன்

ஈசோ இந்தியா அமைப்பு நிறுவனர் 94449 01234

இணையதளம்: www.esoindia.org

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X