பொது செய்தி

இந்தியா

அரபுநாடுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
புள்ளிவிவரம், அரபுநாடு, இந்தியர்கள், உயிரிழப்பு, வேலை, மத்தியஅரசு

புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் சுமார் 34,000 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களின் நிலைக்குறித்து பார்லி., கூட்டத்தொடரில் காங்., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் முரளிதரன், அரபு நாடுகளுக்கு வேலைக்காக சென்ற இந்தியர்களே அதிகளவில் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது தொடர்பாக வெளியுறவு விவகாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரம்: 2014 முதல் தற்போது வரையிலான 5 ஆண்டில் அரபு நாடுகளுக்கு வேலைக்காக சென்ற இந்தியர்களில் 33,988 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.


latest tamil news


இவர்களில், நடப்பு ஆண்டில் இதுவரை 4,823 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளில் அதிகளவில் மரணம் அடைந்தவர்களில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம். இது கடந்த 5 ஆண்டுகளில் 1,200 பேர் இறந்துள்ளனர்.. கடன் தொல்லை, பணிச்சுமை, , ஊதியம் வழங்கப்படாமை, சட்ட சிக்கல்கள் என பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர், மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர். இவ்வாறு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
24-நவ-201919:17:23 IST Report Abuse
Kumar periyaar நீங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஏன் போகிறார்கள், நமக்கு நாட்டேயே ஆளே தேரிலே இவர்களுக்கு வேலையாவது சோறாவது
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-நவ-201919:50:12 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அந்த ஏழாயிரம் எட்டாயிரம் ரூபாயை உள்ளூரிலேயே அதாவது அவர்கள் மாவட்ட தலைநகரிலேயே சம்பாதிக்கலாம். எல்லோரும் While Collar வேலை வேண்டும் என்று பொறியில் அகப்பட்டுக்கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-நவ-201904:11:34 IST Report Abuse
மலரின் மகள் பாலைவனம் செல்லாதீர்கள். பாலை நிலம் சுட்டெரிக்கும் இடுகாடுதான். தற்கொலைக்கு பிரதான காரணங்கள் இரண்டு. முதலாவது ஏஜென்ட்கள் தவறான தகவல்களை அளித்து வேலை வாங்கித்தருவதற்கு என்று இரண்டு முதல் மூன்று லட்சம் ருபாய் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த பணத்தை ஏஜெண்ட்களுக்க தருவதற்கு கடன் வாங்கி அதுவும் அதீத வட்டியில் வாங்கி தந்து விட்டு அரபு தேசத்திற்கு கூலி வேலைக்கு செல்கிறார்கள். சென்ற உடனேயே அவர்களுக்கு சம்பளம் கிடைத்து விடும் என்று கூறி அதுவும் ஐம்பதாயிரம் வரை சம்பாதிப்பதற்கு வாய்ப்பு என்று கூறி அனுப்புகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு கிடைக்கும் மாத ஊதியம் வெறும் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரைதான். இந்த பணத்தில் தான் அவர்கள் உணவை பார்த்து கொள்ளவேண்டும். தங்குவதற்கு இடமும் போக்குவரத்திற்கு ஒரு கூண்டு வண்டியில் மொத்தமாக அழைத்து செல்லும் போக்குவரத்து வசதியும் உண்டு அதற்கு பணம் செலுத்தவேண்டாம். முதல் மாத சம்பளம் கிடைப்பதற்கு மூன்று மாத காலங்கள் ஆகும். உடனடியாக கிடைக்கவே கிடைக்காது. முதலில் அங்கே தொண்ணூறு நாட்கள் விசாவில் வேலைக்கு செல்லவேண்டும். அங்கே சென்றபிறகு மருத்துவ பரிசோதனையில் சான்றிதழ் சரிபார்ப்பிலும் ஏற்கப்படவேண்டும். உடனடியாக அதாவது தேசத்தில் விமானம் இறங்கிய நாளிலிருந்தே பணியில் சேர்ந்ததாகத்தான் அவர்கள் கொள்வார்கள் அது தான் அங்கே விதி. அனால் சம்பளம் தருவதற்கு வங்கி கணக்கு துவங்கவேண்டும். அதற்கு பல வாரங்கள் ஆகலாம். அதுவரையில் நிலைமை சிக்கல் தான் சகஊழியர்கள் உதவியால் உணவு பெற்று வாழவேண்டும் தான். அல்லது எதோ கொண்டுவரும் சொற்ப பணத்தை வைத்து சமாளிக்கவேண்டும். நீர் குடிப்பதற்கு வாங்கியே தீரவேண்டும். அல்லது எதாவது மசூதிகளில் சென்று குடித்து கொண்டு சமாளிக்கவேண்டும் இவர்கள் வேலை செய்யும் பகுதி ஊருக்குள் இருந்தால் அது சாத்தியம். சம்பளம் கிடைக்க ஆகும் காலம் வரையில் கடன் வாங்கி தான் காலத்தை ஓட்டுகிறார்கள் பெரும்பாலானோர். அதற்கு காரணம் இவர்கள் பணியில் சேர்ந்த இடத்தில் சிலர் இந்த தொழிலில் ஏற்கனவே நல்ல சம்பாத்தியம் பார்த்து விட்டு இவர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு யாராவது மூலமாகவோ கடன் ஏற்பாடு செய்து தருவார்கள். மாதத்திற்கு வெறும் ஐந்து வட்டி தான் என்று ஏற்பாடு செய்து தருவார்கள். சம்பளம் வந்த வுடன் முதல் பிரச்சினையாக கடனை அங்கே அடைக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க பலருக்கு பணியில் சேர்ந்த அடுத்த மாதமே வீட்டிற்கு கட்டாயம் பணம் அனுப்பிய ஆகவேண்டிய சூழ்நிலை. அதுதான் மிகப்பெரிய பிரச்சினை. ஊரில் வாங்கிய மூன்று லட்சம் கடனை கொடுக்க வெளிநாட்டில் இருந்து மாதம் முப்பதாயிரம் அனுப்பி ஒருவரிடத்தில் கடன் மற்றும் வட்டியை அடைத்து விடலாம் என்று ஒரு கணக்கு பார்த்து வந்திருப்பார்கள். வந்தவர்களுக்கு முதல் சாக் வெறும் எட்டாயிரம் ரூசபை அதுவும் மூன்று மாதங்களுக்கு பிறகே சாத்தியம் என்பது. அங்கிருந்தே மனக்கவலையும் அதன் பிறகு அங்கிருந்து கிளம்பவே முடியாது என்ற சூழலும் தான். அதை சமாளிக்க வெளிநாடுகளில் கடன் வாங்கவேண்டியிருக்கும். அநியாய வட்டிக்கு வாங்கி அதை உடனடியாக அனுப்ப வேண்டும் குடும்பத்திற்கு. பணத்தை அனுப்பவும் வழியிருக்காது காரணம் அங்கு வங்கி கணக்கு துவங்கியாக வேண்டும். அதை தீர்ப்பதற்கும் வட்டிக்கு பணம் தருபவர்களே ஏற்பாடு செய்வார்கள். உண்டி என்று சொல்கின்ற ஹவாலா முறைப்படி பணத்தை நேரடியாக இவர்களின் குடும்பத்திற்கே வந்து தந்துவிடுவார்கள். இது ஒன்றே முறை. இப்போது கடன் வாங்கிய வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்தவரின் குடும்பத்தினரையும் அவர்கள் இருப்பிடத்தையும் நன்கு தெரிந்து கொண்டு விட்ட வெளிநாட்டில் கடன் தந்த கூட்டத்தினரின் முழு ஆளுகைக்குள் இவர் வந்தாகிவிட்டது. ஒரு விதத்தில் அடிமை தான். இவ்வாறாக ஆரம்பம் முதலே மனா பிரச்சினையும் பண பிரச்சினையும் துரத்தி கொண்டே இருக்கும். தாயகம் திரும்பலாம் என்றால் அதற்கு வழியில்லாமல் செல்வதற்கு சில முக்கிய காரங்கள், இவர்கள் மூன்றாண்டுகள் வேலை செய்வதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். நடுவில் விட்டு செல்வதென்றால் மூன்று மாத சம்பளத்தை செலுத்த வேண்டும் இவர்கள் மேலும் பயண செலவு, விசா செலவு மற்றும் புதிய தொழிலாளியை தேர்வு செய்வதற்கு ஆகா வேண்டிய செலவு என்று எப்படியும் மூன்று லட்சம் ருபாய் செலுத்தினால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி தாயகம் திரும்பலாம் அதுவும் சொந்த செலவில். இவர்களுக்கு வேறு வழியே இல்லை மூன்று வருடம் அங்கே சமாளிக்கவேண்டும். மூன்று வருடங்கள் கழித்து தான் தாயகம் திரும்ப வேண்டும். அப்போது தான் வேலைக்கு அமர்த்திய கம்பனி விமான டிக்கெட் கொடுத்து மூன்று மாத விடுமுறை சம்பளத்துடன் தந்து அனுப்பும். வேலையில் தொடர விருப்பம் இல்லை பானையை நிறைவு செய்து கொள்கிறேன் என்று வெளியேறினால் பனி செய்த காலத்திற்கு வருடத்திற்கு பத்து நாட்கள் என்று மூன்று வார்டுளுக்கு முப்பது நாட்கள் சம்பளம் எண்டு டேர்ம் பெனிபிட் என்று அத்தருவார்கள் அது என்ன ஒருமாத சம்பளம் தானே வெறும் பத்தாயிரம் வரை தான். பணம் பிரச்சினை உள்நாட்டில் வாங்கிய கடன் அதனை சமாளிப்பதற்கு வெளிநாட்டில் வாங்கிய கடன். இரண்டும் கந்து வட்டிவகையில் தான் இருக்கும். ஏஜென்ட்கள் சொல்வதோ அரபு தேசத்தில் கடனுக்கு வட்டி வாங்கமாட்டார்கள் அங்குள்ளோர் நிறைய இனாம் தருவார்கள் அவர்கள் நல்ல பணக்காரர்கள் ஒவ்வொரு பண்டிகை காலட்திக்ரும் ஈத் (நன்கொடை) நிறைய கிடைக்கும். பக்ரீத் போன்ற பண்டிகையின் பொது மட்டுமே இரண்டு லட்சம் வரை நன்கொடையாக கிடைக்கும் என்று எல்லாம் சொல்லி அனுப்புவார்கள். பதுமையாக இருக்கும் என்ற கனவு வறண்டு போன ஏமாற்றம். பண பிரச்சினை பிரதான காரணம். அடுத்த தான இரண்டாவது காரணம் உளவியல் ரீதியானது. பணிக்கு வரும் வயதோ பருவ வயது. அந்த வயதில் இவர்களுக்கு தவறாக நண்பர்கள் சொல்லி அங்கு சென்றால் அங்குள்ள குடும்பத்தினருடன் தவறாக பழகுவது பற்றியெல்லாம் சகட்டு மேனிக்கு கதை அளந்திருப்பார்கள். ஊரிலும் திருமணம் நடக்கவில்லை அல்லது குடும்பத்தை விட்டு சில காலத்திலேயே தனியாக பிரிந்து விட்ட சூழல். தனிமை. மொழி பிரச்சினை கலாசார பாகுபாடு. புதியதாக பழகுவதற்கு நல்லவர்கள் அரிதிலும் அரிது. அனைவரும் பிரச்சினை தீர்க்க அதீத பணம் என்ற எண்ணத்தில் வந்திருப்பவர்கள். குடும்ப இல்லாத சமுதாயத்தை விட்டு பிரிந்து விட்ட உண்மையானவர்கள் இல்லாத நிலையில் மருத்துவ வசதியற்று ஒரு பிரச்சினைக்கு ஆறுதலுக்கு கூட யாருமற்ற சூழலில் உடலின் தேவைகள் வேறு பூதாகரமாக வேறு வழியிருக்காது அவர்களுக்கு. இராது பிரச்சினைகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டே தொடர்ந்து இருக்கும். அவர்கள் தற்கொலைகளை தேடுகிறார்கள் முடிவாக. கூலி தொழிலுக்கு வேற்று டெஹஸம் குறிப்பாக பாலைவன தேசத்து பக்கம் செல்லாதீர்கள். உழைப்பை தாய் நாட்டிற்காகவும் குடும்பத்திற்காகவும் தரவேண்டும் தவிர அந்நியர்களுக்கு உழைத்து கொடுத்துவிட்டு வெறும் வயிற்றை மட்டும் நிரப்புவதற்கெல்லை செல்லவேண்டாம். பாவம் மதத்தின் பெயரால் ஏமாற்ற படுகிறார்கள். அதிகம் ஹைதராபாத் மற்றும் உத்திரப்பிரதேசத்தை குறிப்பாக நக்லௌ சிடியை சார்ந்தவர்கள். (நக்லௌ பாமரர்களின் பாஷையில் முழுதும் சொல்லப்படுகின்ற மாநகர் - லக்னோ - பாவம் அவர்களுக்கு லக் நோ)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X