கோவில் வேண்டும்!
அயோத்தி விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுஉள்ளனர். அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. இந்த விவகாரத்தில், 30 ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள், இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலம், யாருக்கும் எந்தவித அரசியல் ஆதாயமும் இல்லை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டிருப்பர் என நினைக்கிறேன். சச்சின் பைலட்துணை முதல்வர், ராஜஸ்தான், காங்கிரஸ்
நாட்டின் கவுரவம்!
நாட்டின் கவுரவமாக கருதப்படும் பல பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் வசம் ஒப்படைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில், பார்லி.,யில் கூட கருத்து கேட்கப்படவில்லை. எந்தவித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தனியார் நிறுவனங்களை குஷிப்படுத்துவதற்காக, லாபம் ஈட்டும் சில நிறுவனங்களை கூட, மத்திய அரசு விற்பனை செய்கிறது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிலோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
அரசியல் ஊழல்!
தேர்தல் பத்திரங்கள் விற்பனை என்பது, அரசியலில் நடக்கும் சட்டபூர்வமான ஊழல். பா.ஜ.,வுக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ, அப்போது விதிகளை மீறி, இந்த பத்திரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், இந்த விதிகள் மீறப்பட்டு, குதிரை பேரங்கள் நடைபெற வழி வகுக்கிறது. இதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும்.சீதாராம் யெச்சூரிபொது செயலர், மா. கம்யூ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE