தேர்தல் பத்திரத்துக்கு எதிர்ப்பு ராஜ்யசபாவில் காங்., அமளி

Updated : நவ 24, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (25)
Advertisement
 தேர்தல், பத்திரத்துக்கு, எதிர்ப்பு,ராஜ்யசபாவில் ,காங்., அமளி

புதுடில்லி, :தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தை எழுப்பி, ராஜ்யசபாவில், காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் பத்திரங்கள் மூலமாக, யார் வேண்டுமானாலும் நன்கொடை கொடுக்கலாம் என்றும், நன்கொடை கொடுப்பவர்கள், தங்களை பற்றிய விபரங்களை தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்தது.


'நோட்டீஸ்'



இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பையும் மீறி, நிதி அமைச்சகம் செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. நேற்று முன்தினம், லோக்சபாவில் இந்த விவகாரத்தால் பெரும் அமளி ஏற்பட்டது. நேற்று, ராஜ்யசபாவில் இந்த விவகாரம் எதிரொலித்தது.

காங்கிரசின் ஆனந்த் சர்மா, இந்த விவகாரத்தை கிளப்பினார். சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, இது குறித்து விவாதிக்கும்படி அவர் வலியுறுத்தினார். இது குறித்து, சபை தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:சபையில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, தினமும் எனக்கு ஏராளமான, 'நோட்டீஸ்'கள் கொடுக்கப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு முறையும் சபையை ஒத்தி வைக்க முடியாது. சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டிய அளவுக்கு முக்கியமான பிரச்னை எதுவும் தற்போது இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, காங்., உறுப்பினர் திக்விஜய் சிங்கிற்கும், வெங்கையா நாயுடுவுக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பாரபட்சமாக செயல்படுவதாக வெங்கையா நாயுடு மீது, திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டினார்.

கோபமடைந்த வெங்கையா நாயுடு, ''சபை தலைவரை இப்படி பேசுவது சரியல்ல. உங்கள் அனுபவத்துக்கு முற்றிலும் முரண்பட்ட வகையில் செயல்படுகிறீர்கள்,'' என்றார். இதைத் தொடர்ந்து, சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின், சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன.


போராட்டம்

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர் உள்ளிட்ட பலர், இதில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக, இவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-நவ-201918:33:07 IST Report Abuse
Endrum Indian எனது கடமை எந்த ஒரு காரண காரியமில்லாமல் - இப்படிக்கு முஸ்லீம் நேரு காங்கிரஸ் , சுடலை மாயாண்டி கட்சிகள்
Rate this:
Share this comment
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201915:27:34 IST Report Abuse
Ramaraj P ஆனால் பஞ்சமி நிலத்தை நானும் வைத்திருக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
23-நவ-201914:48:18 IST Report Abuse
kulandhai Kannan மூலபத்திரத்திற்கு திமுக எதிர்ப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X