'ஆதார்' சட்ட திருத்தத்தை எதிர்த்து மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்'

Updated : நவ 24, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:'ஆதார்' சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. எதிர்ப்புஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு, வங்கிகள், மொபைல் சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, மத்திய அரசு,
'ஆதார்' சட்ட திருத்தம், எதிர்த்து மனு, மத்திய அரசுக்கு,உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்'

புதுடில்லி:'ஆதார்' சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


எதிர்ப்புஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு, வங்கிகள், மொபைல் சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, மத்திய அரசு, ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றியது.

அதில், தனியார் அமைப்புகள் ஆதாரை அடிப்படை அடையாள அட்டையாக பயன்படுத்த அனுமதியளிப்பது, ஆதார் விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிப்பது ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டன.இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்த சட்டம் அமலானது.


விசாரணைஇந்நிலையில், ஆதார் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.ஜி.வொம்பட்கிரே என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், 'ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது' என, அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
23-நவ-201912:44:11 IST Report Abuse
thulakol மோகன் குமாருக்கு இத்தனை வருசம் ஆச்சு இந்த உண்மையெய் தெரிவதற்கு காலம் காலமாக இது தான் நடக்கிறது டாக்டர் சர்வபள்ளி ராதாக்ரிஷ்ணன்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
23-நவ-201907:58:38 IST Report Abuse
blocked user ஆதர் ஒருவரின் அடையாளங்க்களை சரி பார்க்க உபயோகிக்கலாம் - ஆனால் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாத அளவில் இருப்பது நல்லது. உதாரணத்துக்கு முகவரி போன்ற தகவல்கள்...
Rate this:
Cancel
mohan kumar -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201907:46:42 IST Report Abuse
mohan kumar why president post, just to say yes to all ruling party decisions. Happiest post enjoyable one.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X