'சபை ஒத்தி வைக்கப்பட்டால் நோட்டீஸ் ரத்து

Updated : நவ 24, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி:'அமளியால், சபை ஒத்தி வைக்கப்பட்டால், பூஜ்ய நேரத்தில் பேச அனுமதி கோரி, உறுப்பினர்கள் கொடுத்துள்ள, 'நோட்டீஸ்' ரத்து செய்யப்படும்' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார்,.பூஜ்ய நேரம்பார்லிமென்டில், குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில், காலை, 11:00 -12:00 மணி வரை, பூஜ்ய நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த
 'சபை ,ஒத்தி, வைக்கப்பட்டால், நோட்டீஸ், ரத்து

புதுடில்லி:'அமளியால், சபை ஒத்தி வைக்கப்பட்டால், பூஜ்ய நேரத்தில் பேச அனுமதி கோரி, உறுப்பினர்கள் கொடுத்துள்ள, 'நோட்டீஸ்' ரத்து செய்யப்படும்' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார்,.


பூஜ்ய நேரம்

பார்லிமென்டில், குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில், காலை, 11:00 -12:00 மணி வரை, பூஜ்ய நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த நேரத்தில், உறுப்பினர்கள், மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசலாம். இதற்கு, உறுப்பினர்கள், சபை தலைவரிடம் முன் கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டால், மறுநாள், அந்த நோட்டீஸ்கள் எடுத்துக் கொள்ளப் படும். இந்நிலையில், சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று கூறியதாவது:உறுப்பினர்கள் சிலருக்கு, சபையில் அமளி யில் ஈடுபடுவது, ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. இதனால், சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படுகிறது.


பிரச்னை



பூஜ்ய நேரத்தில் பேச, நாம் கொடுத்த நோட்டீஸ்கள், இன்று இல்லாவிட்டால், நாளை எடுத்துக் கொள்ளப்படும் என, உறுப்பினர்கள் கருதுகின்றனர். இனி, அமளியால் சபை ஒத்தி வைக்கப் பட்டால், பூஜ்ய நேரத்தில் பேச, உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ்கள், மறுநாள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. சிறப்பு அனுமதி பெற்றுதான், அந்த பிரச்னைகள் பற்றி உறுப்பினர்கள் பேச முடியும்.

மேலும், சபையில், போஸ்டர்கள், செய்தித் தாள்களில் வெளியான கட்டுரைகள் உட்பட எதையும் காட்டி, உறுப்பினர்கள் பேசக் கூடாது; அமளியில் ஈடுபடக் கூடாது. எந்த பிரச்னை பற்றியும் விவாதிக்க அனுமதிப்பது, சபை தலைவரின் தனிப்பட்ட உரிமை. இதில், யாரும் தலையிட முடியாது. ராஜ்யசபாவின், 250வது கூட்டம் நடந்து வரும் நிலையில், சபையை சுமுகமாக நடத்த, உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.


'நீங்கள் என்ன அமைச்சரா'



ராஜ்யசபாவில், பூஜ்ய நேரத்தின் போது, டில்லியில் மக்களுக்கு தரமில்லாத குடிநீர் வழங்கப் படுவதாக, பா.ஜ., உறுப்பினர் விஜய் கோயல் கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில், ''டில்லியில் குடிநீர் தரம் மிகவும் மோசமாக உள்ளது என, சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது,'' என்றார்.இதற்கு, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் எதிர்ப்பு தெரிவித்து, குறுக்கே பேசினார்.

''பா.ஜ., உறுப்பினர், குடிநீர் தரம் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர், எந்த அரசையும் குற்றம் சாட்டவில்லை.அதனால், நீங்கள் குறுக்கே பேசக் கூடாது,'' என, சஞ்சய் சிங்கிடம், சபை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.ஆனாலும், விஜய் கோயல் பேசிய போது, குறுக்கே, சஞ்சய் சிங்கும் பேசினார். இதனால் கோபம் அடைந்த வெங்கையா நாயுடு, ''கேள்விகளை திருத்துவதற்கும், பதில் அளிப்பதற்கும் நீங்கள் என்ன அமைச்சரா,'' என, சஞ்சய் சிங்கிடம் கேட்டார். இதன் பின், சஞ்சய் சிங் இருக்கையில் அமர்ந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
24-நவ-201903:19:45 IST Report Abuse
Harinathan Krishnanandam மக்கள் மனுக்களை கணினி மூலம் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கொடுத்தால் மக்கள் திரும்ப திரும்ப மனுக்கள் தரவேண்டிய நிலையை தவிர்க்கலாம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-நவ-201908:16:37 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திரா காலத்தில் ராஜீவு சில இளம் ரவுடி எம்பிகளோடு சேர்ந்து எதிரணியினர் பேசும்போதெல்லாம் கூச்சல் போட்டு கெடுத்ததுதான் துவக்கமே .இப்போதும் சாதாரண நடைமுறை நோட்டிஸ் மூலமே விவாதிக்க இயலும் தேர்தல் பத்திரம் போன்ற விவகாரங்களுக்கும் ஒத்திவைப்பு என்பது தகாது .பார்லிமென்டில் ஒவ்வொரு நிமிடமும் வீணாகும்போது மக்கள் வரிப்பணம் வீணாகிறது எனும் எண்ணம் எல்லோருக்குமே வேண்டும்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
23-நவ-201908:13:00 IST Report Abuse
Darmavan இது சரியான முடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X