பொது செய்தி

தமிழ்நாடு

டிசம்பரில் செயல்பட துவங்குகிறது ஓமந்துாரார் அரசு மருத்துவமனை

Added : நவ 22, 2019
Advertisement
 டிசம்பரில் செயல்பட துவங்குகிறது ஓமந்துாரார் அரசு மருத்துவமனை



சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, டிசம்பர் மாதத்தில் செயல்பட உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை, திருவல்லிக் கேணி, வாலாஜா சாலையில், ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 2015ல் துவங்கப்பட்டது. மருத்துவமனைக்கான கட்டட பணிகள் முழுமை பெறாததால், கஸ்துாரிபா காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.இந்நிலையில், ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்துக்குள் நடைபெற்று வந்த, கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. அதனால், மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.கருவிகள்முதற்கட்டமாக, கதிரியக்கவியல் துறையில், 2.70 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்ட, 16, 'சிடி ஸ்கேன்' கருவிகள், 'எக்ஸ்ரே' உபகரணங்கள் ஆகியவை, பொது மக்களின் பயன்பாட்டுக்கு, ஜூன் மாதத்தில் கொண்டு வரப்பட்டன. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மருத்துவமனை செயல்பட தயாராக உள்ளது. எனவே, கஸ்துாரிபா காந்தி மருத்துவமனையில் உள்ள, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சொந்தமான உபகரணங்களை இடமாற்றம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள், இந்த வாரத்தில் முடிவடைவதால், டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, ஓமாந்துாரார் மருத்துவ கல்லுாரி வளாகத்தில், முழு நேர மருத்துவமனை செயல்படும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.345 கோடிஇது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது:ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரியில், 100 எம்.பி.பிஎஸ்., இடங்கள் உள்ளன. மேலும், மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. கல்லுாரி வளாகத்தில், 345 கோடி ரூபாய் செலவில், ஏழு மாடி கொண்ட, ஏழு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், நான்கு கட்டடங்கள் மருத்துவ கல்லுாரி மற்றும் மாணவர் விடுதியாகவும், மூன்று கட்டடங்கள் மருத்துவமனையாகவும் செயல்பட உள்ளன.இதில், பொது மருத்து வம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் என, 25 துறைகள் செயல்பட உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X