சென்னை, : தமிழகத்தில், 'காகிதமில்லா சட்டசபை' உருவாக்க, சட்டசபைசெயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும், 'காகிதமில்லா சட்டசபை' உருவாக்க, 'இ - விதான்' என்றதிட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும், சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகள், அதற்கான பதில்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேச்சு என, அனைத்து விபரங்களும், இணையதளத்தில் வெளியிடப்படும்.அதேபோல், தற்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு, துறை வாரியாக வழங்கப்படும் கொள்கை விளக்க குறிப்புகள், துறை செயல் திட்டங்கள், அவர்களின் பேச்சுக்கள் என, அனைத்து விபரங்களையும், இனி, 'இ- மெயில்' வழியே அவர்களுக்கு அனுப்ப, முடிவு செய்யப் பட்டுள்ளது.
இத்திட்டத்தை, தமிழக சட்டசபை செயலகம், ஏற்கனவே அமல்படுத்த துவங்கி உள்ளது. முழுமையாக செயல்படுத்த, சட்டசபை செயலக ஊழியர்களுக்கு, வரும், 25, 26ம் தேதிகளில், பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
பயிற்சி வகுப்பை, 25ம் தேதி, சபாநாயகர் தனபால் துவக்கி வைக்கிறார்.இது குறித்து, சட்டசபை செயலர் சீனிவாசன் கூறியதாவது:காகிதமில்லா சட்டசபையை உருவாக்கும் பணியை, ஏற்கனவே துவக்கி உள்ளோம். பெரும்பாலான ஆவணங்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'இ - மெயில்' வழியே அனுப்பப்படுகின்றன. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விரைவில், முழுமையாக காகிதமில்லா சட்டசபை உருவாக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE