அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : நவ 23, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை, :அனைத்து இடஒதுக்கீடு விபரங்களும் அடங்கிய, வெள்ளை அறிக்கை ஒன்றை, லோக்சபா கூட்டத்தில், பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.அவரது அறிக்கை:பா.ஜ., ஆட்சியில், மத்திய அரசு அலுவலகங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொது தொகுப்பில் உள்ள மருத்துவ படிப்பு
இடஒதுக்கீடு,வெள்ளை அறிக்கை,பிரதமர்,ஸ்டாலின்,வேண்டுகோள்

சென்னை, :அனைத்து இடஒதுக்கீடு விபரங்களும் அடங்கிய, வெள்ளை அறிக்கை ஒன்றை, லோக்சபா கூட்டத்தில், பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.

அவரது அறிக்கை:பா.ஜ., ஆட்சியில், மத்திய அரசு அலுவலகங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொது தொகுப்பில் உள்ள மருத்துவ படிப்பு இடங்களிலும், இடஒதுக்கீட்டை நிராகரிப்பது, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும்.

'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய, இடஒதுக்கீடு உரிமையை தட்டிப் பறிப்பது, மன்னிக்க முடியாத துரோகம்.

மத்திய அரசு அலுவலகங்களில், 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடஒதுக்கீடு விபரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை, லோக்சபாவில், பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்; உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தி.மு.க., பாடம் கற்பிக்கும்!

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:வேலுாரில், தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமாரை, ஆளுங்கட்சியினர் மிரட்டியது போல, கோவையில், அரசு நிகழ்ச்சிக்கு சென்ற, எம்.எல்.ஏ., கார்த்திக் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கே, இந்த கதி எனில், அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு, தி.மு.க., தக்க பாடம் கற்பிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


சூத்திரதாரி யார்?

தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் அறிக்கை:'ஆட்சியில் இருந்தபோது, எந்தச் சாதனையும் செய்யாத ஸ்டாலினுக்கு, பாவமன்னிப்பு கிடையாது' என, புதிய வேடதாரியாக, முதல்வர் இ.பி.எஸ்., மாறி சாபம் விட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கை துவங்கியது முதல், கோடநாடு வரை, எத்தனையோ பாவங்களுக்குச் சூத்திரதாரி தான், முதல்வர் இ.பி.எஸ்.,

'தோல்வி பயத்தால், மறைமுக தேர்தல் என்ற முடிவெடுத்தீர்களா' என, ஸ்டாலின் கேட்டதில், என்ன தவறு இருக்க முடியும்? மொத்தத்தில், தான் எதையோ போட்டு உடைத்து விட்டதாக, முதல்வர் இ.பி.எஸ்., ஒப்புக் கொண்டுள்ளார். எதையோ அல்ல; அவர் உடைத்துஉள்ளது ஜனநாயகத்தை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


கட்டணம் திரும்ப பெறலாம்தி.மு.க., தலைமை அறிக்கை:



மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள், கட்டணத்திற்கான ரசீதை கொடுத்து,வரும், 28 முதல், 30 வரை,மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் பணத்தை பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-நவ-201923:35:27 IST Report Abuse
Rajagopal எல்லா அரசியல் காட்சிகளிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். தீ மு காவில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒரு ஆதி திராவிடர் தலைவராக நியமிக்கப் பட வேண்டும். செய்வார்களா என்று பார்ப்போம். இட ஒதுக்கீடு தொடங்கிய போது இருந்த நோக்கம் வேறு. இப்போது இருக்கும் நோக்கம் வேறு. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு இட ஒதுக்கீட்டின் நிலைமையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்பேத்கார் ஏற்படுத்திய நிபந்தனை தள்ளி விடப் பட்டு, அது ஒரு ஓட்டு வாங்கும் ஆயுதமாக இரண்டாம் தலைமுறை அரசியல்வாந்திகளால் மாற்றப் பட்டு, யாருக்கு இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய் சேராமல், தரக்குறைவை எல்லாத் துறைகளிலும் ஏற்படுத்தி நாட்டை நாசமாக்கும் வழியில் கொண்டு விட்டிருக்கிறது. இப்படியே இதை நிரந்தரமாக ஓட்டிக்கொண்டு போக முடியாது. இது வரை எத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள், இன்னும் யாருக்கு இது அவசியமாகத் தேவை, யாருக்கு இனி தேவை இல்லை என்று பரிசீலனை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் கையிலிருந்து இதை அகற்றப்பட வேண்டும்.
Rate this:
Cancel
raman - Madurai,இந்தியா
23-நவ-201920:08:00 IST Report Abuse
raman இவரது கட்சியில் தலைவர் ,மற்றும் கட்சிப் பதவிகளில் இட ஒதுக்கீடு உள்ளதா. பிற்படுத்தப் பட்டோர், மகளிருக்கு இட ஒதுக்கீட்டின் படி பதவிகள் கொடுத்தது உண்டா.
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
23-நவ-201917:09:43 IST Report Abuse
sankar வெள்ளை அறிக்கை இன்னும் தாங்கள் வெளியிட வில்லை .... மிசா கைதியா ?? மிஸ்ஸால கைதியா ??? ..... பஞ்சமி நிலமா ??? இல்லை பறித்த நிலமா ??? .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X