சென்னை: ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., நிறுவனங்களில், இடஒதுக்கீடு கடைப்பிடிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, வரவேற்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில், பேராசிரியர்களை நியமிக்கும் போது, இனி கண்டிப்பாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என, அவற்றின் நிர்வாகங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது;
இது, மிகவும் வரவேற்கத்தக்கது. இடஒதுக்கீட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, அடுத்த பல ஆண்டுகளுக்கு, ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் போகலாம். எனவே, கடந்த காலங்களில், சமூக நீதி மறுக்கப்பட்டதற்கு, மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு, ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.ஐ.எம்., நிறுவனங்களில், எத்தனை பணியிடங்களை, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கினால், அவர்களுக்கு முறையே, 27 சதவீதம், 15 சதவீதம், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுமோ, அத்தனை பணியிடங்களை, கூடுதலாக உருவாக்க வேண்டும்.
அவை அனைத்தையும் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அவற்றை முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE