மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே? கூட்டணி கட்சிகள் பேச்சில் உடன்பாடு

Updated : நவ 23, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை,: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக
 மஹாராஷ்டிரா, அடுத்த, முதல்வர்,உத்தவ் தாக்கரே? ,கூட்டணி கட்சிகள்,பேச்சில், உடன்பாடு

மும்பை,: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, இந்த இரு கட்சிகளுக்கு இடையே யான கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் பேச்சு நடத்தி வந்தனர். சிவசேனா, ஹிந்துத்வா கொள்கை உடைய கட்சி என்பதால், அதற்கு ஆதரவு அளிக்க, காங்., தலை வர் சோனியா தயங்கினார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் வற்புறுத்தல் காரணமாக, சோனியா சமாதானமாகி, சிவசேனாவுக்கு ஆதரவு தர சம்மதித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,மும்பையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் சந்தித்து, நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.


நிபந்தனை



அப்போது, 'முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே தான் ஏற்க வேண்டும். வேறு யாருக்கும் அந்த பதவியை விட்டுத் தர முடியாது. 'அமைச்சரவையில், எங்கள் கட்சியும், காங்கிரசும் பங்கேற்கும்' என, சரத் பவார் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தேசியவாத காங்., செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது என முடிவாகி விட்டது.இந்த கூட்டணி அரசு, 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இன்று காலை, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, மூன்று கட்சி தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத், காங்கிரசின் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல், அஜித் பவார் உள்ளிட்ட தலைவர்கள், மும்பையில் நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினர். இதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரும் இறுதிக் கட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், சரத் பவார் கூறுகையில், ''மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. உத்தவ் தாக்கரே, இந்த அரசுக்கு தலைமை ஏற்பார். மற்ற விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சு நடக்கிறது,'' என்றார். அப்போது செய்தியாளர் கள், 'உத்தவ் தாக்கரே தான், முதல்வரா' என, கேட்டனர். அதற்கு அவர், ''உங்களுக்கு ஹிந்தி தெரியாதா... மஹாராஷ்டிராவில் அமையவுள்ள புதிய அரசுக்கு, உத்தவ் தாக்கரே தான் தலைமை தாங்கப் போகிறார்,'' என்றார்.


சந்திப்பு



இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள், எந்த நேரத்திலும், கவர்னரை சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, மஹாராஷ்டிராவில் செயல்படும் சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சிவசேனா தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும்; சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்., 54 தொகுதிகளிலும்; காங்., 44 தொகுதிளிலும் வெற்றி பெற்றன.மஹாராஷ்டிராவில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்தால், அதை விட சந்தர்ப்பவாதம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி அரசு அமைந்தால், அது, ஆறு மாதங்கள் கூட நீடிக்காது.நிதின் கட்கரி, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், பா.ஜ.,


ஆட்சி அமைக்க எதிர்ப்புகோர்ட்டில் மனு தாக்கல்



மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சுரேந்திரா இந்திரா பகதுார் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கவே, மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, காங்., - தேசியவாத காங்., ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா முயற்சிக்கிறது.

இது, ஓட்டளித்த மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. இதை, கவர்னர் அனுமதிக்கக் கூடாது. ஜனநாயக நடவடிக்கையை, சிவசேனா, காங்., தேசிய வாத காங்., கட்சிகள் வர்த்தகமாக்கு கின்றன. இந்த முயற்சிக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மேயர் தேர்தல்: சிவசேனா வெற்றி

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், சிவசேனா வெற்றி பெற்றது. தானே மேயர் தேர்தலி லும் சிவசேனாவே வெற்றி பெற்றது. நாசிக் மேயர் தேர்த லில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி ஆதரவுடன், பா.ஜ., வெற்றி பெற்றது. லாத்துார் மேயர் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர், பா.ஜ., வேட்பாளரை தோற்கடித்தார். உல்ஹாசங்கர் மேயர் தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருந்தும், காங்., மற்றும் தேசிய வாத காங்., ஆதரவுடன், சிவசேனா வெற்றி பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
23-நவ-201908:19:56 IST Report Abuse
natarajan s யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் திரு பாட்னவிஸ் N C P துணையுடன் முதல்வர் ஆகிவிட்டார் , NCP யின் திரு அஜித் பவார் துணை முதல்வர் .காங்கிரஸ் சிவசேனாவிற்கு பல்பு . Latest News .
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
23-நவ-201907:38:17 IST Report Abuse
blocked user வெறும் செய்தி மட்டுமே வருகிறது. வேலை ஆகமாட்டேன் என்கிறதே... யாரையோ கட்டாயப்படுத்துவது போல அல்லவா நிகழ்வுகள் இருக்கிறது?
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
23-நவ-201906:06:30 IST Report Abuse
Palanisamy Sekar என்னடா இது..அரசியலுக்கு வந்த சோதனை..நேற்றுவரை அரசியலில் தீண்டத்தகாத கட்சி..அது ஒரு இந்து மத வெறியர் கட்சி..சிவசேனா போன்ற கட்சியை அரசியலிலிருந்தே நீக்கணும்னு தவமிருந்த காங் சரத் கட்சி..இப்போ சம்பந்தியாக மாறி உனக்கு மேல் பாகம்..எனக்கு மத்த பாகம் எல்லாம்..ன்னு பிரிச்சிக்கிறாங்க.இதுவா அரசியல்? இவர்களின் நோக்கம் என்ன..சம்பாதிப்பது..கொள்ளையடிப்பது..ரவுடியிசத்தை வளர்க்க துணைபோவது என்பதா? அல்லது பா ஜ க வை எதிர்ப்பதாக கூறி அரசியல் மாண்புகளை தொலைப்பதா? இவர்களை நம்பி வாக்களித்த மக்களின் எண்ணம் எப்படி ஈடாகும்? ஒரு வாக்காளர் கட்சிகளை சீர்தூக்கி கூட்டணியை வைத்து நம்ம்ம்ம்பி வாக்களித்தால்..இப்படியா வைத்த மை காய்வதற்குள் நிறம் மாறுவது? இதனை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றால் நிச்சயம் இவர்களை ஆட்சிக்கு வருவதற்கு தடை விதிக்க கூடும்..அதாவது சட்டத்தின் கீழ் தான் இவர்களை தடுக்க முடியும். ஏனெனில் வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கு இது சமம். எதிரும் புதிரும் ஒன்று சேர்வதா? நல்லதற்கில்லையே..விடக்கூடாது..இவர்களை கோர்ட்டுக்கே சென்று முறையிட்டு வாக்காளர் என்கிற உரிமையோடு ஏமாற்றப்பட்டதை எடுத்துரைத்து தடை வாங்கணும்..நிச்சயம் ஒரு நல்ல முடுவு கிட்டக்கூடும்..ஒரே ஒரு குடும்பத்தினருக்கு அல்ல இந்த நாடு..பொதுவானது..மகனுக்கு கொடுக்காத பதவியை இப்படி முதலில் வாங்கிவிட்டு பின்னர் உடல் நிலையை காரணம் காட்டி மகனுக்கு முடி சூட்டுவதுதான் இந்த உத்தவின் நோக்கம்..இது ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்படவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X