மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே? கூட்டணி கட்சிகள் பேச்சில் உடன்பாடு| Dinamalar

மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே? கூட்டணி கட்சிகள் பேச்சில் உடன்பாடு

Updated : நவ 23, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (4)
Share
மும்பை,: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக
 மஹாராஷ்டிரா, அடுத்த, முதல்வர்,உத்தவ் தாக்கரே? ,கூட்டணி கட்சிகள்,பேச்சில், உடன்பாடு

மும்பை,: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, இந்த இரு கட்சிகளுக்கு இடையே யான கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் பேச்சு நடத்தி வந்தனர். சிவசேனா, ஹிந்துத்வா கொள்கை உடைய கட்சி என்பதால், அதற்கு ஆதரவு அளிக்க, காங்., தலை வர் சோனியா தயங்கினார். தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் வற்புறுத்தல் காரணமாக, சோனியா சமாதானமாகி, சிவசேனாவுக்கு ஆதரவு தர சம்மதித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,மும்பையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் சந்தித்து, நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.


நிபந்தனைஅப்போது, 'முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே தான் ஏற்க வேண்டும். வேறு யாருக்கும் அந்த பதவியை விட்டுத் தர முடியாது. 'அமைச்சரவையில், எங்கள் கட்சியும், காங்கிரசும் பங்கேற்கும்' என, சரத் பவார் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தேசியவாத காங்., செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது என முடிவாகி விட்டது.இந்த கூட்டணி அரசு, 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இன்று காலை, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, மூன்று கட்சி தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத், காங்கிரசின் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல், அஜித் பவார் உள்ளிட்ட தலைவர்கள், மும்பையில் நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினர். இதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரும் இறுதிக் கட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், சரத் பவார் கூறுகையில், ''மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. உத்தவ் தாக்கரே, இந்த அரசுக்கு தலைமை ஏற்பார். மற்ற விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சு நடக்கிறது,'' என்றார். அப்போது செய்தியாளர் கள், 'உத்தவ் தாக்கரே தான், முதல்வரா' என, கேட்டனர். அதற்கு அவர், ''உங்களுக்கு ஹிந்தி தெரியாதா... மஹாராஷ்டிராவில் அமையவுள்ள புதிய அரசுக்கு, உத்தவ் தாக்கரே தான் தலைமை தாங்கப் போகிறார்,'' என்றார்.


சந்திப்புஇதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள், எந்த நேரத்திலும், கவர்னரை சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, மஹாராஷ்டிராவில் செயல்படும் சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சிவசேனா தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும்; சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்., 54 தொகுதிகளிலும்; காங்., 44 தொகுதிளிலும் வெற்றி பெற்றன.மஹாராஷ்டிராவில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்தால், அதை விட சந்தர்ப்பவாதம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி அரசு அமைந்தால், அது, ஆறு மாதங்கள் கூட நீடிக்காது.நிதின் கட்கரி, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், பா.ஜ.,


ஆட்சி அமைக்க எதிர்ப்புகோர்ட்டில் மனு தாக்கல்மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சுரேந்திரா இந்திரா பகதுார் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கவே, மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, காங்., - தேசியவாத காங்., ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா முயற்சிக்கிறது.

இது, ஓட்டளித்த மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. இதை, கவர்னர் அனுமதிக்கக் கூடாது. ஜனநாயக நடவடிக்கையை, சிவசேனா, காங்., தேசிய வாத காங்., கட்சிகள் வர்த்தகமாக்கு கின்றன. இந்த முயற்சிக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மேயர் தேர்தல்: சிவசேனா வெற்றி

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், சிவசேனா வெற்றி பெற்றது. தானே மேயர் தேர்தலி லும் சிவசேனாவே வெற்றி பெற்றது. நாசிக் மேயர் தேர்த லில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி ஆதரவுடன், பா.ஜ., வெற்றி பெற்றது. லாத்துார் மேயர் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர், பா.ஜ., வேட்பாளரை தோற்கடித்தார். உல்ஹாசங்கர் மேயர் தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருந்தும், காங்., மற்றும் தேசிய வாத காங்., ஆதரவுடன், சிவசேனா வெற்றி பெற்றது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X