புனே : நாட்டிலேயே முதல் முறையாக, ஒன்பது எருமைகளை செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து, புனே விஞ்ஞானி கள் சாதனை படைத்துஉள்ளனர்.மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள மாட்டுப் பண்ணையில், ஒன்பது எருமைகள் செயற்கை முறையில் கருத்தரித்து உள்ளன.
இது பற்றி, விஞ்ஞானி, டாக்டர் ஷியாம் ஜாவே கூறியதாவது: செயற்கை முறை கருத்தரிப்பு, பசுக்களிடம் வெற்றி பெற்றுள்ளது. சாதாரணமாக, மாடுகள், ஒரு ஆண்டில், ஒரு கன்று தான் பிரசவிக்கும்.
எதிர்பார்ப்பு
ஆனால், செயற்கை முறையில் கருத்தரித்தால், ஒரு ஆண்டில், 15 - 20 கன்றுகளை, மாடுகளால் பிரசவிக்க முடியும். பசுக்களிடம் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதையடுத்து, புனேவில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில், எருமை மாடுகளிடம் இந்த சோதனையை மேற்கொண்டோம். இதில், ஒன்பது எருமைகள் கருத்தரித்து உள்ளன. அவை, அடுத்த ஆண்டு பிரசவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பலன் அடைவர்
இந்த எருமைகளுக்கு தேவையான சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த முறை முழுமையாக வெற்றி பெற்றால், கிராமங்களில், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்; விவசாயிகள் பெரும் பலன் அடைவர். இவ்வாறு, அவர் கூறினார்.