பொது செய்தி

இந்தியா

திஹார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை

Updated : நவ 24, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 திஹார் சிறை, சிதம்பரம்,அமலாக்கத்துறை,விசாரணை

புதுடில்லி, : ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்துக்கு, 'ஜாமின்' கிடைத்தது. ஆனாலும், ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு தொடர்பாக நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிதம்பரத்திடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கும்படி, அமலாக்கத் துறை சார்பில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த, சிறப்பு நீதிமன்றம், திஹார் சிறையிலேயே சிதம்பரத்திடம் இரண்டு நாள் விசாரணை நடத்த, அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று காலை திஹார் சிறைக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், சிதம்பரத்திடம், ஐ.என்.எக்ஸ்., மீடியா விவகாரம் தொடர்பாக, சில ஆவணங்களை காண்பித்து, விசாரணை நடத்தினர்.

அப்போது, சில கிடுக்கிப்பிடி கேள்விகளையும், சிதம்பரத்திடம் அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. நேற்றைய விசாரணை முடிவடைந்த நிலையில், இன்றும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த, அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
23-நவ-201921:00:01 IST Report Abuse
Sampath Kumar விசாரணை விசாரணை விசாரணை அம்புட்டுதான் வேற இல்லை யுவர் ஹானர்
Rate this:
Share this comment
Cancel
23-நவ-201917:31:54 IST Report Abuse
நக்கல் மஹா கூத்தில் இவரை எல்லோரும் மறந்துவிட்டார்கள்... சோறு தண்ணி வெச்சாங்களா???
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
23-நவ-201916:34:14 IST Report Abuse
ramanathan இவன் செய்தது பொருளாதார குற்றம். இவனை வெளியில் விடுவது நல்லதல்ல. நல்லா அடித்து கேட்டால் மட்டுமே உண்மையை சொல்லுவான்.இவன் மகன் ஒரு மஹா திருடன். இதில் சோனியா. .மன்மோகன்சிங் கிற்கும் பலத்த தொடர்பு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X