பொது செய்தி

இந்தியா

'ஜீரோ' மார்க் எடுத்த மாணவிக்கு கூகுள் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டு

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (14)
Advertisement
SundarPichai, SarafinaNance, Google, CEO, Physics, Inspired, கூகுள், சிஇஓ, சரபினாநான்ஸ், பாராட்டு

புதுடில்லி: இயற்பியல் பாடத்தில் 'ஜீரோ' மார்க் எடுத்த பல்கலை., மாணவிக்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டியுள்ளார்.

உலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலை.,யில் வானியற்பியல் பிரிவில் சரபினா நான்ஸ் என்ற மாணவி,26 பி.எச்டி., படித்து வருகிறார். வானியற்பியலில் சூப்பர்நோவாக்களை ஆராய்ச்சி செய்து வரும் சரபினா, டுவிட்டரில் தன்னை பற்றி பதிவிட்டார். அதில், நான் 4 ஆண்டுகளுக்கு முன் குவாண்டம் இயற்பியல் பாடத்தில் '0' எடுத்தேன்.




இதனால், முதன்மை பாடத்திற்கும் இயற்பியல் பாடத்திற்கும் பயந்து அதை மாற்ற வேண்டும் என எனது பேராசிரியரை சந்தித்தேன். தற்போது, நான் வானியற்பியல் பி.எச்டி.,யில் உயர்மட்டத்தில் இருக்கிறேன், 2 பேப்பர்களை வெளியிட்டுள்ளேன். கிரேடுகள், உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல, என பதிவிட்டிருந்தார். மாணவியின் பதிவை பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில், கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர்பிச்சையும் அந்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'சிறப்பாக சொன்னீர்கள், மிகவும் ஊக்கமளிக்கிறது' என பாராட்டியுள்ளார். இதனால், மாணவியின் பதிவு, வைரலாகியது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-நவ-201909:31:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni பாலருக்கும் அவா படிப்பும் ஜொலிக்கும் சம்பந்தமேயில்லீங்க என்று இருக்கே ட்ரிப்ப்லே படிச்சுட்டு பாங்கே லே மனஜரா இருக்காங்க ஸ்விச்கூயோட ரிப்பர் பண்ண முடியாத ஜோலியேதான்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-நவ-201904:57:02 IST Report Abuse
skv srinivasankrishnaveni சிலர் நன்நாடிப்பாங்க முதல்லேருந்து இறுதிவரை RANKLE THERIYUM வெளியேகிடைக்காமல் தவிப்பாங்க இந்த ஆட்களுக்கும் பொதுஅறிவுக்கும் காதவழியாக்கும் திறமை இருக்காது இருப்பதைவைச்சுமேலுக்கும் வரத்தெரியாது சிலர் ரொம்பவே சுமாராப்படிப்பாங்க ஜீ கே பிரமாதமாகற்பூரமூ ளையாக இருப்பாங்க , படிச்சதும் கிடைச்சிவேளைலே சேர்ந்துண்டு மெல்லுக்குவர முயல்பவன் புத்திசாலி போனால் அமெரிக்காவேதான் போவேன் என்று அட்மா வேறுவேலைக்குப்போகாமல் பட்டம் வாங்கி ட்டு வெட்டியாகுந்தரவனெல்லாம் பொறுப்பே இல்லாதவங்களேதான் இதுகள் எம் எல் ஏ /எம்பி ஆயிடலாமே
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
24-நவ-201913:15:22 IST Report Abuse
sankar அவர் ஸீரோ மார்க்கு எடுத்தது ஒன்றே அவரது தகுதி போல பேசுகிறீர் மிஸ்டர் சுந்தர் - அவர் தகுதிகள் - அதை வளர்த்துக்கொண்டது அதை பற்றி பேசி இருக்கவேண்டும் - பெரிய லார்டு லபக் தாஸ் ஆகா இருந்தால் மார்க்கு தேவை இல்லை - அல்லது இடஒதுக்கீடு வரம்பில் இருந்தாலும் தேவை இல்லை - ஆனால் ஒரு மார்க்கு குறைந்தாலும் இடம் கிடைக்காமல் அலையும் பெற்றோர்கள் பாடு சொல்லி முடியாது - உம்மை சொல்லி குற்றம் இல்லை - உமக்கு சார்புநிலை தடுமாற்றம் - அவ்வளவே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X