எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு: எட்டு மண்டலங்களுக்கு எச்சரிக்கை

Updated : நவ 23, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் வருவாயில், 30 சதவீத சரிவு தொடர்வதால், உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை உள்ளிட்ட எட்டு மண்டல அதிகாரிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய, தமிழகம் முழுவதும், 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் தான், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு, அடிப்படை
பத்திரப்பதிவு,வருவாய்,மீண்டும் சரிவு,எட்டு,மண்டலங்களுக்கு எச்சரிக்கை

பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் வருவாயில், 30 சதவீத சரிவு தொடர்வதால், உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை உள்ளிட்ட எட்டு மண்டல அதிகாரிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய, தமிழகம் முழுவதும், 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் தான், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு, அடிப்படை ஆதாரமாகும். நடப்பு நிதியாண்டான, 2019 - 20ல் பத்திரப்பதிவு வழியாக, 13 ஆயிரத்து, 123 கோடி ரூபாய் வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆகஸ்ட் இறுதி வரை, இலக்கைவிட, 30 சதவீதம் குறைவாகவே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் இறுதி வரையிலான வருவாய் நிலவரம் குறித்து, சில நாட்களுக்கு முன், பதிவுத்துறை தலைமையகத்தில் ஆய்வு நடந்தது.

ஐ.ஜி., தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அனைத்து டி.ஐ.ஜி.,க்கள், கூடுதல், ஐ.ஜி.,க்கள் பங்கேற்றனர்.நடப்பு நிதியாண்டுக்கான இலக்கில், கடலுார் மண்டலத்தில், 93.09 சதவீதம்; சென்னை உள்ளிட்ட எட்டு மண்டலங்களில், 78 முதல், 84 சதவீதம் வரை, வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இதனால், பத்திரப்பதிவு வருவாய் இலக்கை எட்டுவதில், 30 சதவீத சரிவு தொடர்வது உறுதியாகியுள்ளது.

அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க, மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, டி.ஐ.ஜி.,க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வருவாய் இலக்கை எட்டுவதில் மெத்தனமாக இருக்கும் சார் - பதிவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
மதிப்பு வேறுபாடு காரணமாக, மேல் முறையீட்டில், 22 ஆயிரத்து, 582 பத்திரங்கள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது, இறுதி உத்தரவுகள் பிறப்பிக்காததால், 215 கோடி ரூபாய் வருவாய் பாக்கி உள்ளதாக, உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

இதில், வேலுார், கடலுார், சேலம், திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில், மிக குறைந்த எண்ணிக்கையில் தான், மேல் முறையீடுகள் தீர்க்கப் பட்டுள்ளன. இதை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகளின் உத்தரவால், மெத்தனமாக இருக்கும் சார் - பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
25-நவ-201917:59:30 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் நிலம் வாங்குவதை விட்டுவிட்டு எல்லோரும் படம் பார்க்க போறாங்க, அதனால பத்திர பதிவு குறைந்தாலும் பொருளாதாரம் சிறப்பா இருக்கு ஆங்
Rate this:
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
23-நவ-201922:41:50 IST Report Abuse
ramanathan இதுக்கு சரியான காரணம் ரியல் முடக்கியது ஐகோர்ட்.
Rate this:
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
23-நவ-201922:13:10 IST Report Abuse
ramanathan ரியல் எஸ்டேட்டை நாசம் செய்தது ஐகோர்ட் .விவசாயிகளை காப்பாத்துகிறேன் என்று கூரி விவசாயிகளை கடன் காரனாக்கியது. திருந்தாத அரசியல்வாதிகளை திருத்த முடிந்ததா ?ஊழலை ஒழிக்க முடிந்ததா?தமிழக அரசு ஐந்து சென்ட் ஐந்து சென்டாக விற்றுக்கொள்ள சட்டமேற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X