பயங்கரவாத நிறுவனத்திடமிருந்து பா.ஜ.,வுக்கு நிதி காங்., குற்றச்சாட்டு

Added : நவ 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'பயங்கரவாதிகளுடன் பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பா.ஜ. 10 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது' என காங். குற்றம்சாட்டியுள்ளது.காங். செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக

புதுடில்லி: 'பயங்கரவாதிகளுடன் பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பா.ஜ. 10 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது' என காங். குற்றம்சாட்டியுள்ளது.காங். செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி.இக்பால் மிர்ச்சியிடம் பண பரிமாற்றங்கள் செய்து சொத்துக்கள் வாங்கியதாக மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து அந்த நிறுவனத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.இந்நிறுவனத்திடமிருந்து 2014 -15ம் ஆண்டில் பா.ஜ.10 கோடி நிதியுதவி பெற்றுள்ளது. இந்த நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ. பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என கூறும் பா.ஜ. பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திடம் நிதி பெற்றது பற்றி பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.'பா.ஜ.வின் ஊழல் வெளியாகியுள்ளது' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavel - Ariyalur,இந்தியா
23-நவ-201907:43:07 IST Report Abuse
Rajavel ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றோரு நிறுவனம் நிதி பெற்றிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X