CBI raids former Manipur CM Okram Ibobi Singh, recovers demonetised currency worth Rs 26 lakhs | மாஜி முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை| Dinamalar

'மாஜி' முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019
'மாஜி' முதல்வர் ,சி.பி.ஐ., சோதனை

புதுடில்லி: மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஐபோபி சிங் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக மூன்று மாநிலங்களில் உள்ள ஒன்பது இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மணிப்பூரில் காங்.,கை சேர்ந்த ஐபோபி சிங் 2002 முதல் 2017 வரை முதல்வராக பதவி வகித்தார். மேலும் மணிப்பூர் வளர்ச்சி கழகத்தின் தலைவராகவும் 2009 - 17 காலகட்டத்தில் பதவி வகித்தார்.




அப்போது மணிப்பூர் வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட 518 கோடி ரூபாய் நிதியில் ஐபோபி சிங் 332 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர், மிசோரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஐபோபி சிங் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.ஐபோபி சிங் வீட்டில் இருந்து 11.47 லட்சம் ரூபாய் ரொக்கம் 26.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X