அரசியல் செய்தி

தமிழ்நாடு

விருப்ப மனு தி.மு.க.,வினர் மும்முரம்

Added : நவ 22, 2019
Share
Advertisement

அன்னுார் : உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, தி.மு.க., சார்பில், விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

அன்னுார் ஒன்றிய, நகர தி.மு.க., அலுவலகத்தில், மூன்று நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. நேற்று ஒன்றிய செயலாளர் ஆனந்தனிடம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, உமாவதி, முரளிதரன், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கோமதி, அருணாசலம் ஆகியோர், விருப்ப மனு அளித்தனர்.'அன்னுாரிலுள்ள, 15 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு இதுவரை, 21 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்' என, தெரிவித் தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஊராட்சி செயலாளர் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X