சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு

Added : நவ 23, 2019
Advertisement

கூடலுார் : நாடுகாணியில், கைது செய்யப்பட்ட, முன்னாள் நகராட்சி கவுன்சிலரை போலீசார் சட்டையை பிடித்து அழைத்து சென்றதாக கூறி, கூடலுார் போலீஸ் ஸ்டேஷனை, பலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.

கூடலுார் நாடுகாணி சோதனை சாவடியில், நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா சென்று திரும்பிய, கூடலுார் நகராட்சி முன்னாள் காங்., கவுன்சிலர் உஸ்மான், 47, என்பவரின் காரை போலீசார் சோதனையிட்டனர்.இதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நேற்று பிற்பகல், போலீசார் அவரை கூடலுார் மாஜிஸ்திரேட் பாலகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவுபடி, அவரை சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர்.இந்நிலையில், 'போலீசார் அவரின் சட்டை காலரை பிடித்து, அழைத்து வந்தனர்,' என, கூறி, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், கூடலுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களில் ஒருவரை விசாரணைக்காக போலீசார் ஸ்டேஷனுக்குள் அழைத்து சென்றனர்.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X