அமித்ஷா மாஸ்டர் ஸ்ட்ரோக்: மஹா.,வில் பா.ஜ., ஆட்சி

Updated : நவ 23, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (250)
Advertisement
ShivSenaCheatsMaharastra,MaharashtraPolitics, UddhavThackeray, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பட்னவிஸ், அஜித் பவார்,

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹா., அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்று கொண்டனர். அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது.




மஹாராஷ்டிராவில், நடந்த சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவும், கூட்டணி கட்சி சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை.


மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, இந்த இரு கட்சிகளுக்கு இடையே யான கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதற்கு சோனியாவும் சம்மதித்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. இதில் ஒரு மித்த முடிவு ஏற்பட்டதாகவும், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.




இந்நிலையில், மஹா.,அரசியலில், யாரும் எதிர்பாராத தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் . பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர்களுக்கு கவர்னர் பகத் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று இருவர் மட்டுமே பதவியேற்று கொண்டனர். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இந்த கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என சரத்பவார் கறியுள்ளார்.







அமித்ஷா மாஸ்டர் ஸ்ட்ரோக்


பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார். அதேபோல், மஹாராஷ்டிராவிலும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரை பிரித்து, பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்துள்ளதாக அம்மாநில அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (250)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
28-நவ-201907:19:00 IST Report Abuse
Vetri Vel எய்ம்சில பெட் ஒன்னு காலியா கிடக்குது.. அந்த ஸ்ட்ரோகே அடிச்ச மாஸ்டர்க்கு பொருத்தமானதா இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
26-நவ-201920:10:23 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சாணக்கியரை காணவில்லை
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-நவ-201901:59:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹார்ட் ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையாம்.. அவ்வ்வ்.....
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
26-நவ-201915:07:34 IST Report Abuse
pradeesh parthasarathy வரலாறை புரட்டி பார்த்தால் தெரியும் பிறை மனையை கடத்தி வைத்து விட்டு அவளை அடைந்தால் அதை மாஸ்டர் ஸ்ட்ரோக்கே என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா .......நீதி ஒரு நாள் மலரும் என்பதற்கு இப்பொழுது அஜித் பவார் ராஜினாமா செய்த சம்பவம் ஒன்றே போதுமானது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X