அரசியல் செய்தி

தமிழ்நாடு

சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது: சுப்பிரமணியன் சுவாமி

Updated : நவ 23, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (73)
Share
Advertisement

சென்னை : சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், படத்தின் பப்ளிஷிட்டிக்காகவே ரஜினி அரசியலுக்கு வர போவதாக கூறி வருவதாகவும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news



சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. படத்தின் பப்ளிஷிட்டிக்காகவே ரஜினி அரசியலுக்கு வர போவதாக கூறியுள்ளார் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரணியசுவாமி.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம், ரஜினி அரசியலுக்கு வருவது, ரஜினி - கமல் இணைவது, சசிகலா விடுதலை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:


latest tamil news


* தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என நினைக்கிறீர்களா ?
சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவரது சினிமா ரிலீஸ் ஆகப் போவதால் பப்ளிஷிட்டிக்காக அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கலாம். இதற்கு முன் எத்தனையோ முறை அரசியலுக்கு வர போகிறேன், வர போகிறேன் சொல்லி இருப்பார். இது பண்ண போகிறேன், அது பண்ண போகிறேன் என சொல்லி இருக்கிறார். கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை.

* மக்கள் நலனுக்காக இணைவோம் என ரஜினி-கமல் கூறி உள்ளனர்?
இது போன்ற சினிமா டயலாக்குகளை கேட்டு அலுத்து விட்டது. அரசிலுக்கு வருவேன் என ரஜினி கூறியும் எதுவும் நடக்கவில்லை.


latest tamil news


* சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என ஒரு தகவல் வந்துள்ளதே ?
அது பற்றி எனக்கு தெரியாது. அது பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த வழக்கு தொடர்ந்ததில் எனக்கு பங்கு உண்டு. அதிகபட்சம் ஓராண்டிற்குள் எல்லாம் முடிந்து விடும். அதிமுக.,வை நல்லமுறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு உண்டு. சசிகலா வெளியில் வந்தால் நிச்சயமாக அதிமுக.,வினர் அனைவரும் சசிகலாவிடம் தான் போவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
26-நவ-201915:53:16 IST Report Abuse
narayanan iyer நீங்கள் இதுவரை இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள் .?
Rate this:
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
25-நவ-201914:16:04 IST Report Abuse
JIVAN சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது மெண்டல்களாலும் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது
Rate this:
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
24-நவ-201921:26:02 IST Report Abuse
rajprince அய்யா சுப்பு சுருதி ஹெரானி ,ஹேமா மாலினி ,ஜெய்பிரத ,கௌதமி ,சன்னிதியோல் இவங்கள் எல்லாம் யார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X