வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காதவாறு, பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வந்த அக்கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை 'சாணக்யா' என டுவிட்டர் வாசிகள் புகழ்ந்து வருகின்றனர். இது குறித்து ''#Chanakya'' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சில நாட்களாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆலோசனை நடத்தின. டில்லியிலும், மும்பையிலும் அக்கட்சி பிரதிநிதிகள் பேசிgf கொண்டிருந்தனர். விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
நாளை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என கூறினர். கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருந்தது. ஆனால், மஹாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத, தலைகீழ் அரசியல்மாற்றம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆதரவுடன் பா.ஜ.,வின் பட்னவிஸ் முதல்வரானார். பா.ஜ., ஆதரவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என சரத்பவார் அறிவிக்க அக்கட்சி உடைந்தது தெரியவந்தது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சிக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முக்கிய காரணம் என செய்திகள் வெளியாகின. இது குறித்து பீஹார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி டுவிட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டார்.அதில் ''இந்திய அரசியலில் உண்மையான சாணக்யர் நான் தான் என்பதை அமித்ஷா மீண்டும் நிருபித்துள்ளார்'' என பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து டுவிட்டரில் ''# chanakya'' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. இந்த ஹேஷ்டேக்கில் பலரும் அமித்ஷாவை புகழ்ந்தும், காங்கிரசையும், சிவசேனாவையும் கடுமையாக விமர்சிப்பதுடன், மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மஹாராஷ்டிராவில் பாஜ., மேற்கொண்ட நடவடிக்கையை சர்ஜிக்கல் ஸ்டிரைக் என குறிப்பிட்டு, '' #surgicalstrike'' என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். மேலும் ''# Motabhai, #ajit pawar, #shivasena, # uddhav thackeray'' என்ற ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE