மஹா.,வில் யாருக்கு எத்தனை எம்எல்ஏ.,க்கள் ஆதரவு?

Updated : நவ 23, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

மும்பை : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா-தேசியவாத காங்.,-காங்., கட்சிகள் பேச்சுவார்த்தை இறுதி செய்து வந்த நிலையில், அரசியலில் திடீர் திருப்பமாக இன்று காலை தேசியவாத காங்.,ன் சட்டசபை தொறடா அஜித்பவாரின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், தேசிய அரசியலையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.



latest tamil news



போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் இருந்து வந்த பா.ஜ.,வுக்கு தற்போது 159 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. அதே சமயம் ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்த சிவசேனாவிடம் 56 எம்எல்ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவை. ஆனால் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தது. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து அடம்பிடித்து வந்ததால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி உடைந்தது.


latest tamil news



இதனால் சிவசேனா - 56, தேசியவாத காங் - 54, காங்.,-44 இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டாலும் யாருக்கு முதல்வர் பதவி, எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி என்பதை முடிவு செய்வதில் ஏற்பட்ட இழுபறியால், ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில் தேசியவாத காங்.,ன் அஜித் பவார் திடீரென தனது ஆதரவு எம்எல்ஏ.,க்களுடன் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.


latest tamil news



யாருக்கு எத்தனை பேர் ஆதரவு :



பா.ஜ., - 105 + தேசியவாத காங்., - 54. மொத்தம் - 159
இது தவிர சுயேட்சைகள் 29 பேரில் 12 பேர் ஏற்கனவே பா.ஜ.,வுக்கு ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனால் 105+54+ 12 = 171
காங் - 44
சிவசேனா - 56

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-நவ-201904:27:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni சரத்பவார் அண்ட் சோனியா ஒரே விதம் ஏமாந்தால் எதுகும் செய்யும் விபரீதங்கள் தேர்தல்ல நிக்கும்போது பிஜேபி கூடத்தானேகூட்டுவச்சது சிவசேனா சி எம் குர்ஸிமீதுவெறி வரவே ஆட்டம் போட்டானுக பலன் அம்போ சிவசம்போ என்று போயாச்சு ஒருதேர்தல் நடத்த எவ்ளோசிலவும் அரசுக்குத்தெரியுமா மீண்டும் தேர்தல் என்றால் வரிவழங்கி அள்ளித்தரதுக்கு கொடியே கருப்புலேவந்ச்சுருக்கானுக சோனியக்கட்சி பவார்கட்ச்சி சேனா எல்லாம் எகானமி யா பார்த்தால் எல்லாம் மக்களின் வரிப்பணம்தான் வரிகொடாமல் ஏமாற்றுவோர் பெரிய பணக்காரமுதலைகளேதான் முதல்பொடாமலகோடிஸ்வரா ஆனாங்களே எல்லா கச்சிக்காராலும்தான் சினிமாநடிகர்களோ வாங்குவதுபலகோடிகள் அண்ட் லக்ஷங்கள் வரிக்கேட்டால் ஒப்பாரி வாய்ப்பானுக இவ்ளோவாங்கினாலும் எல்லாம் மதுமாதுக்குபோயிடுதுமே என்று கணக்குக்காட்டுவானுகளா ?அன்று குதிரைவாலில் கோட்டிக்காட்டினானுக மார்க்கெட்போனால் எல்லாம் இழந்துணின்னா பலர் உண்டு நேர்மையா வாழ்ந்தவா அன்றும் இன்றும் என்றும் நடுவாந்தரம்தான் கூடியவரை இந்துக்களிடம் மதுஇல்லீங்க மாது க்குப்போனால் எய்ட்ஸ் வந்துருமேன்னும் பயம்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
23-நவ-201923:06:20 IST Report Abuse
elakkumanan மெயின் ரோட்டில் ஒக்காந்துஇருந்து திருடனை பிடிக்கணும்னா , திருடன் மெயின் ரோட்டில் ஓடி வரவேண்டும். திருடன் சத்துக்குள்ளாற புகுந்து ஓடுறான். இப்போ, போலீசும் சத்துக்குள்ளாற ஓடுது. தெரு முக்குல டீ கடையில எச்ச கிளாசில் டி குடிக்கும் கோஷ்டி போலீசை நேர் வழியில் போகாததற்கு வன்மையா கண்டனம் தெரிவிச்சு அரட்டை அடிச்சிக்கிட்டு இருகாக்கலாம். இதை போலீசும், திருடனும் , மக்களும் கண்டுக்கவே மாட்டாங்க. இது புரிஞ்சா சரி...புரியலீனா, சாரி. இன்னும் இருக்கு. திமுக வினரின் தூக்கம் இனி, நிம்மதியாக இருக்காது, நூறு mla வச்சிக்கிட்டு, காலண்டர் கிழிக்க, அமித்ஷா ஒன்னும் கட்டை இல்லையே.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-201919:15:29 IST Report Abuse
Bhaskaran இன்னும் பவார் கட்சி உறுப்பினர்களை முழுவதும் விலைக்கு வாங்க முடியவில்லை
Rate this:
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
23-நவ-201920:21:09 IST Report Abuse
Harinathan Krishnanandamஎங்களுக்கு கடை மொத்தமும் தேவை இல்லை பாதியே அதிகம் இருந்தாலும் நாளைக்கு வைத்துக்கொள்வேன்...
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
23-நவ-201920:55:53 IST Report Abuse
uthappaவிலை போகும் ஆட்களை தேர்ந்தெடுத்தால் அப்படிதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X