மும்பை : மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா-தேசியவாத காங்.,-காங்., கட்சிகள் பேச்சுவார்த்தை இறுதி செய்து வந்த நிலையில், அரசியலில் திடீர் திருப்பமாக இன்று காலை தேசியவாத காங்.,ன் சட்டசபை தொறடா அஜித்பவாரின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், தேசிய அரசியலையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் இருந்து வந்த பா.ஜ.,வுக்கு தற்போது 159 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. அதே சமயம் ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்த சிவசேனாவிடம் 56 எம்எல்ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவை. ஆனால் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தது. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து அடம்பிடித்து வந்ததால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி உடைந்தது.

இதனால் சிவசேனா - 56, தேசியவாத காங் - 54, காங்.,-44 இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தன. கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டாலும் யாருக்கு முதல்வர் பதவி, எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி என்பதை முடிவு செய்வதில் ஏற்பட்ட இழுபறியால், ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில் தேசியவாத காங்.,ன் அஜித் பவார் திடீரென தனது ஆதரவு எம்எல்ஏ.,க்களுடன் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

யாருக்கு எத்தனை பேர் ஆதரவு :
பா.ஜ., - 105 + தேசியவாத காங்., - 54. மொத்தம் - 159
இது தவிர சுயேட்சைகள் 29 பேரில் 12 பேர் ஏற்கனவே பா.ஜ.,வுக்கு ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனால் 105+54+ 12 = 171
காங் - 44
சிவசேனா - 56
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE