வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: அஜித் பவார், தேசியவாத காங்கிரசை உடைத்தது தொடர்பாக அக்கட்சி தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, '' கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது'' என வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசை உடைத்த, அக்கட்சி தலைவர் சரத்பவாரின் மூத்த சகோதரரின் மகனான அஜித் பவார், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தார். இதனையடுத்து முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்று கொண்டார்.
அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவல்ல. அவரின் தனிப்பட்ட முடிவு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்தார். அஜித்பவாரின் முடிவுக்கு, சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சரத்பவாரின் மகள் சுப்ரீயா சுலே, ' அஜித் பவாரால், ''கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது'' எனவும், '' வாழ்க்கையில் யாரை நம்புவது. இவ்வாறு ஏமாற்றப்பட்டது போல் எனது வாழ்க்கையில் இதுவரை உணர்ந்தது இல்லை... அவரை ஆதரித்தேன். அன்பு செலுத்தினேன். பதிலுக்கு என்ன கிடைத்தது என பாருங்கள்...'' என வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE