ராகுல் மீதான அவதுாறு வழக்கு தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு

Updated : நவ 25, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
 ராகுல், மீதான, அவதுாறு வழக்கு, தள்ளுபடி ,செய்ய, நீதிமன்றம் மறுப்பு

மும்பை, : 'காங்., ராகுல் மற்றும் மா.கம்யூ., பொதுச் செயலர் சீதாராம்யெச்சூரி மீதான அவமதிப்பு வழக்கை, தள்ளுபடி செய்ய முடியாது' என, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 2017ல், சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த கொலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக, காங்., - எம்.பி., ராகுல் மற்றும் மா. கம்யூ., பொது செயலர் சீதாராம்யெச்சூரி ஆகியோர் குற்றம் சாட்டினர். இதைடுத்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் த்ருத்திமான் ஜோஷி என்பவர், மஹாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்தில், இருவர் மீதும், அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, ராகுல் மற்றும் யெச்சூரி தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், அவதுாறு வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்து உத்தர விட்டது. இதையடுத்து, இருவரும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, ராகுல் அவதுாறாக பேசியதாக, ஜோகிந்தர் துலி என்ற வழக்கறிஞர், டில்லி போலீசில் புகார் அளித்தார்.இந்த விவகாரத்தில், ராகுல் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுமாறு, டில்லி நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, டில்லி நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-நவ-201921:21:50 IST Report Abuse
Nagarajan D எவ்வளவு கேவலப்பட்டாலும் திருந்தமாட்டார். அவர் குடும்பதில் ஊறிய அயோக்கியதனம் இவரிடத்தில் இல்லாமலா போகும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-நவ-201917:29:50 IST Report Abuse
Endrum Indian 1முதலில் இந்த ஜல்லடை ஓட்டை சட்டத்தை மாற்ற வேண்டும். பெரிய கட்சியின் தலைவர்கள் அசால்ட்டாக அசிங்கமாக ஒரு பிரதமர், மந்திரி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், முதன் மந்திரி குறித்து பேசும் போது ஒரு சாதாரணருக்கு என்ன தண்டனையோ அதில் அவர்கள் கட்சி ஜனத்தொகை எவ்வளவோ அதில் 1 % பெருக்கி அவர்களுக்கு அந்த அளவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அதாவது சாதாரணன் என்னும் போது ஒரு நாள் சிறை என்றால் அவர்களுக்கு 1% x 1,00,00,000 = 1 லட்சம் நாட்கள் சிறை அதாவது 300 வருடம் சிறை இது நடக்காது என்னும் படியால் உடனே மரண தண்டனை கொடுக்க வேணும். அப்பொழுது தான் இந்த மாதிரி அறிவுகெட்ட பேச்சுக்கள் குறையும்
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
24-நவ-201921:08:10 IST Report Abuse
Darmavanமுதலில் கோர்ட்டுகள் சரியாக வேண்டும்...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-நவ-201914:37:30 IST Report Abuse
Sampath Kumar ஆக செட்டியாருக்கு துணைக்கு ஆளு ரெடி ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X