அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாய்ப்பு கிடைக்குமா?: பன்னீர் ஆதரவாளர்கள் கவலை

Updated : நவ 24, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 வாய்ப்பு கிடைக்குமா?, பன்னீர், ஆதரவாளர்கள்,கவலை

அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து, சென்னை திரும்பிய, துணை முதல்வரை வரவேற்க, இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் வராத நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு, இ.பி.எஸ்., தரப்பினர் வாய்ப்பு தருவரா என்ற சந்தேகம், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், இ.பி.எஸ்., - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.

பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்களில் பெரும்பாலானோர், தற்போதைய அமைச்சர்களுக்கு, எதிர் அரசியல் செய்வோராக உள்ளனர். எனவே, அவர்களை, அமைச்சர்கள் ஏற்க தயாராக இல்லை. அதேபோல், அவர்களும், அமைச்சர்களை ஏற்க தயாராக இல்லை.எனினும், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், இ.பி.எஸ்., பக்கம் இருப்பதால், பன்னீர் ஆதரவாளர்கள், அணி மாறி வருகின்றனர்.


கேள்விக்குறி



அவ்வாறு அணி மாறியவர்களும், அணி மாறாதவர்களும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். அவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.முதல்வர் இ.பி.எஸ்., பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு, சுற்றுப்பயணம் சென்று வந்தார். அப்போது, 8,835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்து, 520க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தார்.

முதல்வர் வெளிநாடு சென்றபோது, அவரை வழியனுப்பவும், சென்னை திரும்பியபோது வரவேற்கவும், அமைச்சர்கள் அனைவரும் விமான நிலையம் சென்றனர். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இம்மாதம், 8ம் தேதி, 10 நாட்கள் பயணமாக, அமெரிக்கா சென்றார்.முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அவர் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்; விமான நிலையத்திற்கு செல்லவில்லை. சென்னை திரும்பியபோது, அவர் தனி அணியாக செயல்பட்டபோது இருந்தவர்களே வந்திருந்தனர்.

அதிர்ச்சிஅமைச்சர்கள் அனைவரும், அவர் வீட்டிற்கு சென்று, வாழ்த்து தெரிவித்தனர். விமான நிலையத்திற்கு வராதது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. தேர்தலில் போட்டியிட, இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும், விருப்ப மனு அளித்துள்ளனர். மாவட்ட செயலர்கள் அளிக்கும் பட்டியல் அடிப்படையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய, இ.பி.எஸ்., முடிவு செய்து உள்ளார்.

பெரும்பாலான மாவட்ட செயலர்கள், இ.பி.எஸ்., ஆதரவாளர்களாக இருப்பதால், தங்களுக்கு வேண்டிய நபர்களை மட்டும், வேட்பாளராக அறிவிப்பர் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களுக்கு, எதிர்கோஷ்டியில் உள்ளவர்களும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என, கவலையில் உள்ளனர்.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில், இ.பி.எஸ்., கை ஓங்கி
இருந்தாலும், பன்னீர் ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர். விருப்ப மனு வாங்க, மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டவர் பட்டியலில், பன்னீர் அணியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால், விமர்சனம் எதுவும் எழவில்லை.சம விகிதம்ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்பது, அதிகாரத்திற்கு வரக்கூடிய வாய்ப்பை வழங்கக் கூடியது. எனவே, சம விகிதத்தில், உள்ளாட்சி பதவி வாய்ப்பை, பன்னீர் அணியினருக்கு, இ.பி.எஸ்., தரப்பு விட்டு கொடுக்குமா என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.

மாவட்ட செயலர்கள், தங்கள் உறவினர்கள், தங்களுக்கு கீழ்பணிந்து நடப்போருக்கு மட்டும், வாய்ப்பளிக்க விரும்புவர். மக்கள் செல்வாக்குடன் இருப்போருக்கு வாய்ப்பு
அளித்தால், தங்களுக்கு எதிராக வளர்ந்து விடுவர் என்ற அச்சத்தில், பரிந்துரைக்க தயங்குவர்.எனவே, கட்சி தலைமை, மாவட்ட செயலர்கள் தரும் பட்டியலை மட்டும் பார்க்காமல், கோஷ்டிகளை கணக்கில் கொள்ளாமல், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு, போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-நவ-201907:34:43 IST Report Abuse
blocked user சின்னம்மா வெளியே வந்தவுடன் கட்சியை ஒப்படைத்து விட்டு இருவரும் ரிஷிகேஷ் சென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
24-நவ-201914:58:28 IST Report Abuse
dandyஎவர் அதிகம் குவார்ட்டர் ...பணம் ..பிரியாணி கொடுக்கின்றார்களோ அவர்கள் பின்னால் டாஸ்மாக் அரசியல் வியாதிகள் செல்லும் ..வேலைக்காரி பணம் கொடுத்தால் போதும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X