அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி - கமல் கூட்டணி பேச்சு ஸ்டாலின் சந்திப்பால் கேள்வியாச்சு

Updated : நவ 24, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
ரஜினி, கமல், கூட்டணி, ஸ்டாலின் ,சந்திப்பு ,சூடு,சட்டசபை தேர்தல், இழுபறி

ரஜினி, கமல் கூட்டணி பேச்சை தொடர்ந்து, தமிழக தேர்தல் கள வியூகம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில், ரஜினி, கமல் கூட்டணி பேச்சு, மற்ற கட்சிகளை உஷார்படுத்தி உள்ளது. சொல்லி வைத்தார் போல், ரஜினியும், கமலும், அடுத்தடுத்து கூட்டணி குறித்து பேசி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை உசுப்பி விட்டுள்ளனர்.வியூகம்ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்றாலும், இந்த கூட்டணியை, ஆளும் கட்சி உள்பட, எந்த கட்சிகளுமே விரும்பவில்லை. அ.தி.மு.க.,வில் தொடங்கி, தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் என, பலரும் ரஜினி, கமலை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

கட்சியே ஆரம்பிக்காதவரின் பேச்சுக்கு, மற்ற கட்சிகள், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன என்ற கேள்வி, ஒரு பக்கம் கிளம்பியுள்ளது. மறுபக்கம், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், தங்களுக்கான கூட்டணி வியூகத்தை திட்டமிட துவங்கிஉள்ளன.சமீபத்தில், காலில் அறுவை சிகிச்சை செய்த கமலை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கே சென்று பார்த்து, நலம் விசாரித்தார். திராவிட அரசியலை வலுவாக எதிர்க்கும் கமலை, ஸ்டாலின் சென்று பார்த்தது, ரஜினியை மட்டுமல்ல; மற்ற கட்சிகளையும் குழப்பி விட்டுள்ளது.தனி மரம்தேர்தல் கள வியூகத்தில், குறிப்பிட்ட கட்சியை, ஒன்று கூட்டணியில் சேர்ப்பர் அல்லது சேர்ப்பதாக கூறி, கடைசி கட்டத்தில், இழுபறி ஏற்படுத்தி, எங்கும் செல்லாதவாறு தனி மரமாக்கி விடுவர்.

இதுபோன்ற தேர்தல் சடுகுடு, வரும் தேர்தல்களில் அமர்களமாக அரங்கேறும். 'கமலை, ஸ்டாலின் சந்தித்தது, கூட்டணிக்கான முதல்கட்ட பணியாகவும் இருக்கலாம். வரும் சட்டசபை தேர்தலில், வலுவான கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்பதை, எந்த அரசியல் கட்சியும் மறுக்காது.'அந்த வகையில் கூட்டணி வியூகங்கள், இனி களைகட்டும்' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vincent - Madurai,இந்தியா
26-நவ-201911:27:23 IST Report Abuse
Vincent ஸ்டாலினுக்கு உள்ள அறிவுக்கு எந்த காலத்திலும் அவரால் முதல்வர் ஆக முடியாது. இது உறுதி. தி மு க தொடர்ந்து மண்ணை கவ்வும். தி ம க வின் மரண குழி நோக்கிய பாய்ச்சலை துவக்கி வைத்தவர் தானை தலைவர் கருணாநிதியேதான்.வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-நவ-201904:42:19 IST Report Abuse
J.V. Iyer துண்டு சீட்டில் உள்ளதை கச்சிதமாக பேசிவிட்டார். ஆக.. ஏதேனும் பழமொழி சொன்னாரோ?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-நவ-201914:42:51 IST Report Abuse
Sampath Kumar அடுத்த முதல்வர் சுடலை தான் , காய் நகர்த்த ஆரம்பிச்சுட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X