அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளையராஜாவுக்கு பா.ஜ., பாராட்டு விழா : மோடியுடன் கைகோர்க்கும் நடிகர்கள்

Updated : நவ 24, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (20)
Advertisement
 இளையராஜா, பா.ஜ., பாராட்டு விழா ,மோடியுடன் , நடிகர்கள், கைகோர்ப்பு

தலித் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், தமிழ் திரையுலக கலைஞர்களின் ஆதரவை பெறவும், இளையராஜாவின், 50 ஆண்டு கால இசைப் பணியை பாராட்டி விழா நடத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இந்த விழாவில், பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினி, கமல் கைகோர்க்கும் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது.வரும், 2021ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை மையப்படுத்தி, தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி காய்களை நகர்த்தி வருகின்றன. 'ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட, தமிழ் திரையுலக கலைஞர்கள் ஒன்றிணைய வேண்டும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, ஆட்சி அமைக்க, அவர்கள் முன்வர வேண்டும்' என, சமீபத்தில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

'மக்கள் நலன் கருதி, நாங்கள் இணைந்து செயல்பட தயார்' என, ரஜினியும், கமலும் திடீரென அறிவித்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசியலில், ரஜினியும், கமலும் இணைந்து செயல்படுவரா என்ற, கேள்வி எழுந்துள்ளது. விமர்சனம்இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், நிகழ்ச்சி ஒன்றில், 'அசிங்கமான பொம்மைகள் இருந்தால், அது கோவில்' என பேசி, சர்ச்சையை கிளப்பினார்.

இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பியது. பா.ஜ., ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் பலர், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அந்த வரிசையில் நடிகையும், பா.ஜ., ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், கடுமையான வார்த்தைகளில், திருமாவளவனை விமர்சித்தார். 'திருமாவளவனை, எங்கு பார்த்தாலும் அடியுங்கள்' என, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நடிகை வீடு முன், முற்றுகை போராட்டம் நடத்தினர்.

'அரைகுறையாக நடிக்கும் நடிகை' என, காயத்ரி ரகுராமை, திருமாவளவனும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு, பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தலித் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இளையராஜாவின், 50 ஆண்டு இசைப் பணிக்கும், ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசைஅமைத்ததற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில், விழா நடத்த, பா.ஜ., தரப்பில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்கும் அளவுக்கு, இவ்விழாவை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


வாய்ப்பு


இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் மோடியின் வீட்டில், மொபைல் போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர், 'டுவிட்டர்' பக்கத்தில், 'பிரதமர் மோடியின் வீட்டிற்கு, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றேன். அப்போது, பாதுகாப்பு வீரர்கள், என்னிடம் இருந்த மொபைல் போனை வாங்கினர்.

'ஆனால், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், மற்றும் சில நடிகையர் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது, திகைப்பை ஏற்படுத்தியது' என, பதிவிட்டிருந்தார். இளையராஜாவுக்கு நடத்தும் பாராட்டு விழாவில், எஸ்.பி.பாலசுப்பிர மணியத்தை அழைத்து, அவரையும் கவுரவிப்பதன் வாயிலாக, அந்த அதிருப்தியை போக்க முடியும். மேலும், பிரதமர் மோடியுடன், ரஜினி, கமல் ஒன்றாக கைகோர்க்கும் அரசியல் அதிசயம் நிகழும். தமிழக அரசியல் கூட்டணியின் காட்சிகளும் மாறும் வாய்ப்பு உருவாகும். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
30-நவ-201920:51:54 IST Report Abuse
Nallavan Nallavan இளையராஜாவை தலித்துகள் தங்களது அடையாளமாகப் பார்க்கவில்லை ..... மாறாகத் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள் ..... பாஜக -வின் இந்த முயற்சி (செய்தியில் உண்மை இருக்கும் பட்சத்தில்) பலன் தராது .....
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
28-நவ-201915:37:38 IST Report Abuse
Lawrence Ron அவரு தம்பிய வளைச்சி போட்டேங்களே என்னாச்சி? ஓட்டிற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியுள்ளது. இதுக்கு பேருதான் தேசபக்தியாம், அடக்கடவுளே
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
25-நவ-201916:23:23 IST Report Abuse
Endless சாம தான பேத தண்டம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X