நடிப்பில் 'அசுரன்' : கலக்கும் சென் கருணாஸ்

Added : நவ 24, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
நடிப்பில் 'அசுரன்' : கலக்கும் சென் கருணாஸ்

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான அசுரனில் தனுஷின் இரண்டாவது மகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுதல்களை பெற்று வருகிறார் கென். நடிகர் கருணாஸ்- பாடகி கிரேஸ் தம்பதியின் மகன். ''நடிகரின் மகன் என்பதால் எளிதாக சினிமாவிற்குள் வந்து விட்டான் என்ற பெயர் எப்போதும் ஏற்படக்கூடாது. திறமை இருப்பதால் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என பாராட்ட வேண்டும்,'' என்ற கென் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது...
* இந்தளவு வரவேற்பு எதிர்பார்த்ததா?கதாநாயகனுக்கு அடுத்தபடியாக சினிமா முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் தந்தனர். கதாநாயகனுக்கு இணையாக அவருடன் பயணிக்கும் சமமான கதாபாத்திரத்தில் நடிக்க எத்தனை பேர் சம்மதிப்பர் என தெரியவில்லை. தனுஷ் அந்த வாய்ப்பளித்து இருக்கிறார்.
* இதற்கு முன் நடித்தது?முதன்முதலில் ரெட்டை சுழி என்ற படத்தில் சிறுவர்களுடன் கும்பலாக நடித்திருக்கிறேன். ரகளைபுரம், நெடுஞ்சாலை படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும் மாதிரி நடித்தது அழகு குட்டி செல்லம் சினிமாவில் தான். பின் அசூரனில் நல்ல வாய்ப்பு கிடைத்தது.
* திருநெல்வேலி ஸ்லாங்கை எப்படி கற்றீர்?பிறந்தது வளர்ந்தது சென்னை. நிறைய பேர் திருநெல்வேலி பாஷை நன்றாக பேசுவதாக பாராட்டியிருக்கிறார்கள். இதற்கு காரணம் படக்குழுவினர் தான். இந்த பாஷை பேச ஒரு மாதம் ஸ்டூடியோவில் இருந்து எப்படி பேசுவது என கற்றுக் கொண்டேன். கொஞ்சநாள் மாரி செல்வராஜ் திருநெல்வேலி வார்த்தைகளை கற்று தந்தார். அதனால் என்னால் நன்றாக பேசமுடிந்தது.
* அசுரன் வாய்ப்பு பின்னணி?அப்பாவால் கிடைத்தது. ஒரு முறை வெற்றிமாறனிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என்னை சந்தித்து, கொஞ்சம் உடலை குறைக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்கப் போகிறாய் என்றார். அப்படிதான் அசுரன் வாய்ப்பு கிடைத்தது.
* அசுரனில் பாதித்த காட்சி?நடிக்கும் போது என்னை பாதித்தது இறுதி காட்சிகள் தான். என்னால் தாங்க முடியவில்லை. இரண்டு மணி நேரம் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தேன்.
* அடுத்த திட்டம்?சென்னை லயோலோ கல்லுாரியில் பி.காம்., படிக்கிறேன். அடுத்த திட்டம் என்று தற்போது எதுவுமில்லை.
இவரை பாராட்ட kenkarunaas@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-நவ-201903:55:56 IST Report Abuse
 nicolethomson ஓவர் ஆக்டிங் மற்றும் ஆக்டிங் இரண்டிற்கும் வித்தியாசம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X