கண்களில் படபடக்கும் இமைகள் எனும் பட்டாம்பூச்சி... தோற்றத்தில் இழையோடும் ரவிவர்மனின் ஓவியக் காட்சி... இதழ்களில் சீறிப்பாயும் வரிகள் எனும் வரிக்குதிரைகள், விரல்களில் வளையும் நகங்கள் எனும் பிறை நிலாக்கள்... நெஞ்செல்லாம் நீங்காமல் நிறைந்த பஞ்சமில்லா அழகி என வர்ணிக்க துாண்டும் நடிகை அஞ்சனா மனம் திறக்கிறார்...
* அழகான அஞ்சனாவின் அறிமுக திரை பயணம்?கேரளா மலப்புரம் எனக்கு சொந்த ஊர். அக்கா கிளாசிக்கல் டான்ஸர், தங்கை ஏர் ஹோஸ்டர்ஸ். நான் ஸ்கூல் படிக்கும் போது நாடகங்கள், மலையாள குறும் படங்களில் நடிச்சிருக்கேன். பின், 'முல்லப்பூ வித்வலம்'ங்குற படத்தில் நடிகையாக அறிமுகமானேன்.
* நீங்க தமிழ் சினிமாவுக்கு எப்போ, எப்படி வந்தீங்க?தமிழ் சினிமா ஆடிஷனில் வெற்றி பெற்ற பின் விக்ராந்த் ஹீரோவாக நடித்த 'தாக்க தாக்க' மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். 'மெய்'ங்குற படம் பண்ணியிருக்கேன். அடுத்த மாதம் 'ஜடா' ரீலீஸ் ஆகுது.
* 'ஜடா' படத்தின் கதை, உங்கள் கேரக்டர் என்ன ?இந்த படத்தில் கதிர் ஹீரோவா நடிச்சிருக்காரு. ஸ்போர்ட்ஸ் தான் கதையின் மையக்கரு. நான் ஆடுகளம் கிஷோருக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். என் கேரக்டர் படத்தில் கொஞ்ச நேரம் தான் வரும். ஆனால், கதைக்கு ரொம்ப முக்கியமான கேரக்டராக இருக்கும்.
* சினிமா தவிர 'டிவி' சீரியலில் கூட நடிக்குறீங்க?ஆமா... 'கல்யாண வீடு' சீரியலில் மெயின் கேரக்டர் பண்றேன். சினிமாவை தாண்டி என்னை பெரிய அளவில் மக்களுக்கு அடையாளம் காட்டியது இந்த சீரியல் தான். மலையாள சீரியல்களில் நடிக்க நிறைய வாய்ப்பு தேடி வருது. மாடலிங் துறையிலும் திறமையை நிரூபித்து வருகிறேன்.
* சினிமா - சீரியல் இதில் எது உங்களுக்கு பிடிக்கும்?சினிமா - சீரியல்... எனக்கு பிரிச்சு பார்க்க தெரியலை. சினிமா பெரிய திரை, சீரியல் சின்ன திரை அவ்வளவு தான். எங்கே நடித்தாலும் கேரக்டர், நடிப்பு திறமை தான் முக்கியம். ரெண்டும் என் ரெண்டு கண்கள் மாதிரி தான். திருமுருகன் இயக்கத்தில் 'கல்யாண வீடு' சீரியல் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் மெகா சினிமா என்று சொல்லலாம்.
* தமிழ் சீரியல் - மலையாள சீரியல் வித்தியாசம் ?பெரிதாக வித்தியாசம் இல்லை; மக்கள் ரசனை தான் மாறும். மலையாள ரசிகர்கள் சீரியல் பார்க்க விரும்புவதை விட சினிமா பார்க்க தான் அதிகம் விரும்புறாங்க. தமிழ் ரசிகர்கள் அதிகளவில் சீரியல், சினிமா பார்க்குறாங்க.
* நடிப்பதற்கு முன் ஏதாவது பயிற்சி எடுப்பீர்களா ?நிறைய சினிமா பார்ப்பேன்... அதில் உள்ள ஒவ்வொரு காட்சிகளையும் கவனமாக பார்த்து மனசுக்குள்ளே பதிவு செஞ்சுக்குவேன். கேமரா எப்படி போகுது, நாம எங்கே நிக்கணும், டயலாக் எப்படி பேசனும் போன்ற விஷயங்களை சினிமாக்கள் பார்த்து கற்றுக் கொள்வேன்.
* நடிகைகளுக்கு ஈடாக பிரபலமாகும் 'டிக் டாக்'கர்ஸ் ?நடிப்பு திறமையை வெளிப்படுத்த 'டிக் டாக்' உதவியாக இருக்கு. நல்ல முறையில் வீடியோ பண்ணினால் டிக் டாக் தப்பு இல்லை. இதன் மூலம் நிறைய பேர் நடிக்க வந்திருக்காங்க. அதனால் டிக் டாக் பிரபலங்களை பாராட்ட தான் வேண்டும்.
* நடிகர்கள் அரசியலுக்கு வர நினைப்பது சரியா ?சினிமாவில் கிடைத்த பெயர், புகழை வைச்சு தான் நடிகர்கள் அரசியலுக்கு வராங்க. மக்களுக்கு நல்லது பண்ணும் எண்ணத்துடன் வந்தால் சரி தான். சினிமா மாதிரி அரசியலில் நடிக்க முடியாது. எதுரீல், எது ரியல்னு மக்கள் கரெக்டா கண்டுபிடிச்சுடுவாங்க.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE