பொது செய்தி

இந்தியா

சட்டவிதி 12: பிரதமருக்கு சிறப்பு அதிகாரம்

Updated : நவ 24, 2019 | Added : நவ 24, 2019 | கருத்துகள் (35)
Advertisement

புதுடில்லி:மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கலைப்பதற்கான பரிந்துரையை பிரதமரே அளிக்க, சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.






மஹாராஷ்டிராவில் அரசியல் அதிரடி நடந்து, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. நள்ளிரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் அதிகாலையில், பட்னவிஸ் பதவியேற்றார்.அதற்கு முன், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ளும் உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்தார்.





வழக்கமாக, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மற்றும் அதை நீக்க, மத்திய அமைச்சரவையின் பரிந்துரை தேவை.ஆனால், மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல், எந்த அடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை நீக்குவதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.இதற்கு, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

அலுவல் ஒதுக்கீடு சட்டத்தின், 12வது விதியின்படி, அவசர காலங்களில் அமைச்சரவையை கூட்ட முடியாத நிலையில், முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படியே, ஜனாதிபதி ஆட்சியை நீக்க பிரதமர் பரிந்துரைத்தார். அதனடிப்படையில், ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விதியை பயன்படுத்திதான் 1975 ஆம் ஆண்டில் இந்திரா, பிரதமராக இருந்தபோது,தன்னுடைய அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-நவ-201909:00:03 IST Report Abuse
ஆரூர் ரங் மராத்தா சமூகமே அரசியலில் மேலாதிக்கம் செய்யவேண்டும் எனும் எண்ணம்தான் சிவசேனா -ஷரத் பவாரை ஒன்று சேர்த்துளளது இது மற்ற சமூகங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-நவ-201908:59:22 IST Report Abuse
ஆரூர் ரங் பொருளாதாரத்தில் பெரிய மாநிலமான மஹாராஷ்டிராவில் ஒரு அரசே இல்லாத நிலை எத்தனை நாளைக்கு தொடரலாம்? அது நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும் .மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஆளும் கட்சிகள் பதவியாசைக்காக ஒன்று சேருவது தீவீரவாதிகள் ஒன்று சேருவது போலத்தான் .தீர்வு? ..இந்தக் குழப்பமான நிலையில் என்ன செய்ய? காஷ்மீரைப்பிரித்ததுபோல விதர்பாவையும் மஹாராஷ்டிராவிலிருந்து பிரித்து இரு மாநிலங்களாகிவிடலாம் . இரண்டு மாநிலங்களுக்கும் தனித்தனி பொதுத்தேர்தல்களை அறிவிக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-நவ-201908:11:19 IST Report Abuse
J.Isaac ஸ்வீடனில் திராவிடப்பட்டியா ? எமெர்கெனசி வருவதற்குள் உண்மையான பெயரையும் ஊரையும் போட பயமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X