மேற்கு வங்க இடைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என்.ஆர்.சி.,

Updated : நவ 26, 2019 | Added : நவ 24, 2019 | கருத்துகள் (9)
Advertisement
இடைதேர்தல், மேற்கு வங்கம், மம்தா,சட்டசபை ,தீர்மானிக்கும், என்.ஆர்.சி,தேசிய குடிமக்கள் பதிவேடு

கோல்கட்டா:மேற்கு வங்க மாநிலத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் இரண்டு தொகுதிகளில், என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளன.


பிரசாரம்

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில் காலியாக உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று இடைத் தேர்தல் நடக்கிறது.தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, வட கிழக்கு மாநிலமான அசாமில் நடந்தது. அதில், பலருடைய பெயர்கள் விடுபட்டன. இதில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள் என்று கூறப்படுகிறது.தற்போது, 'நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

'இது, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரானது' என, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.அதேபோல், அண்டை நாடுகளான, பாக்., ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்குள் அகதிகளாக வந்துள்ள ஹிந்து, பார்சி உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் மசோதாவை, மத்திய அரசு, பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது.


முன்னோட்டம்


இதுவும், முஸ்லிம்களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.இந்த நிலையில், மேற்கு வங்கத்தின், நாடியா மாவட்டத்தின், கரிம்புர் சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, 92.47 சதவீதம் பேர் ஹிந்துக்கள்; 7.3 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.அதேபோல், வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் உள்ள காலியாகஞ்ச் சட்டசபை தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையில், 49.92 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; 49.31 சதவீதம் பேர் ஹிந்துக்கள்.

இந்த இரண்டு தொகுதிகளிலும், என்.ஆர்.சி., மற்றும் குடியுரிமை திருத்த மசோதா குறித்தே, ஆளும் திரிணமுல் காங்., பிரசாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில், ஹிந்துக்களின் ஓட்டுகள் தங்களுக்கு பெருவாரியாக கிடைக்கும் என, பா.ஜ., கணிக்கிறது.மேற்கு மிதுனபுரி மாவட்டத்தின், கரக்புர் தொகுதியும் இடைத் தேர்தலை சந்திக்கிறது.இந்த இடை தேர்தல் முடிவுகள், அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
25-நவ-201917:23:36 IST Report Abuse
Tamilachi இந்த ஓட்டுக்காகத்தானே வங்கதேச முஸ்லீம் தீவிரவாதிகளை குடியமர்த்தி அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து அடியாட்கள் போல வைத்துள்ளதை...சீக்கிரமே வந்துவிட்டது உனக்கு முடிவு...எப்புடி வெளியே இருந்த வந்த முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு குடியுரிமை கொடுக்கலாம்..ஆனா அண்டை நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட இந்திய மக்களுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது...சபாஷ்...நல்லவேளை பிஜேபி பதவிக்கு வந்தது..இல்லையென்றால் இத்தாலி காங்கிரஸும் இந்த வங்கதேச முஸ்லீம் பொம்பளையும் சேர்ந்து இந்தியாவில் இந்துக்களை சிறுபான்மையினர் ஆக்கி இருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-நவ-201915:50:57 IST Report Abuse
Endrum Indian வீதியில் போகும் வெட்டி பொம்பளை போல என்ன இப்படி ஆகி விட்டாய் முஸ்லீம் பேகம் மும்தாஜ் நீ மேற்கு வங்காளத்தின் முதல் பெண் முதல்வர் என்று உன் அறிவில் உதிக்கவில்லையா???
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-நவ-201915:48:06 IST Report Abuse
Endrum Indian வங்க தேச முஸ்லீம் கள்ளக்குடியேறிகளுக்கு முஸ்லீம் பேகம் மும்தாஜ் தான் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொடுத்தாகிவிட்டதே பின் எப்படி என் ஆர் சி இங்கு உண்மையை சொல்ல முடியும்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X